Tue ,Dec 12, 2023

சென்செக்ஸ் 69,928.53
102.93sensex(0.15%)
நிஃப்டி20,997.10
27.70sensex(0.13%)
USD
81.57
Exclusive

பெற்றோர்களே…! உங்கள் செல்லமான மகளின் சிறப்பான வாழ்க்கைக்கு…! சூப்பரான போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள்…

Gowthami Subramani [IST]
பெற்றோர்களே…! உங்கள் செல்லமான மகளின் சிறப்பான வாழ்க்கைக்கு…! சூப்பரான போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள்…Representative Image.

மத்திய மற்றும் மாநில அரசு, பெண்களுக்கென பல்வேறு திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெண் குழந்தைகளுக்கு அவர்களின் எதிர்காலத்தில் பயனளிக்கக் கூடிய வகையில் அமைவதே போஸ்ட் ஆபிஸ் திட்டம் ஆகும்.

அஞ்சல் அலுவலக திட்டம்

போஸ்ட் ஆபிஸ் அல்லது அஞ்சல் அலுவலக திட்டம் என்பது, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உபயோகப்படும் ஒரு மகத்தான சேமிப்பு இடமாகும். இம்மாதிரியான பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காகத் தேர்ந்தெடுக்ககூடிய திட்டமாகும். இது போன்ற திட்டங்களை அரசு ஊக்குவித்து, அவர்களின் கல்வி செலவு உள்ளிட்ட எதிர்காலச் செலவுகளுக்காக உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் பெண் குழந்தைகளின் நலனுக்கு ஏற்ப மிகச் சிறப்பான திட்டங்கள் கை கொடுக்கின்றன.

பொது வருங்கால வைப்பு நிதி

இந்த திட்டத்தில் 7.1% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டமும், பெண் குழந்தைகளுக்கான ஒரு சிறப்பான சேமிப்பு திட்டமாகச் செயல்படுகிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்ச வைப்பு வரம்பாக ரூ.500 செலுத்தியிருக்க வேண்டும்.

இந்த திட்டத்தின் மற்றொரு சிறப்பாக, குழந்தைகளின் அவசர தேவை, உயர் கல்வி தேவை போன்றவை இருப்பின், 5 ஆண்டுகளுக்குப் பிறகு, அக்கவுண்டை முன்னதாகவே மூடி பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

தபால் அலுவலக சேமிப்பு கணக்கு

தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்து சேமிப்பது, வங்கி சேமிப்புக் கணக்கைப் போலவே ஆகும். இரண்டிலும், 4% வட்டி விகிதத்துடன் வருகிறது. இந்தத் திட்டத்தில் 10 வயதுக்குக் குறைவான பெண் குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்களால் அதிகமாக விரும்பப்படுகிறது. அதே போல, இந்த திட்டத்தில் சேர்ந்து முதலீடு செய்வதற்கென அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. இதன் குறைந்தபட்ச வரம்பாக, ரூ.500 செலுத்தலாம். குறிப்பாக, பயனர்கள் இதில் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.50 பராமரிக்க வேண்டும்.

தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு

இந்த திட்டத்தில் குறைந்தபட்ச இருப்பு தொகை ரூ.1000 ஆகும். இந்த திட்டத்தில் வைப்பாளர்கள், வட்டியை ஐந்தாண்டு தொடர் வைப்புத் திட்டமாகவும் மாற்றிக் கொள்ளலாம். மேலும், இந்த திட்டத்தில் பெற்றோர்கள் தங்களது வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதன் மூலம், வரிவிலக்குகளிலிருந்து பயன்பெற முடியும்.

கிசான் விசாஸ் பத்ரா

இந்த திட்டத்திலும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்காக குறைந்தபட்ச வைப்புத் தொகையாக ரூ.1000 செலுத்தி சேமிக்கலாம். அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை சேமிக்க முடியும். அதே போல, இந்த திட்டத்தில் பெண் குழந்தைகள் 18 வயது முடியும் வரை தொகையைத் திரும்ப பெற முடியாது. மேலும், 21 வயது ஆன பிறகு இந்த திட்டம் முதிர்வுப் பலன்களை வழங்குகிறது.

தொடர் வைப்பு

இந்த திட்டமும், பெண் குழந்தைகளுக்கான ஒரு மகத்தான சேமிப்புத் திட்டமாகும். இந்த திட்டத்தில் பெற்றோர்கள் மாதந்தோறும் சிறிய தொகையாக டெபாசிட் செய்து சேமிக்கலாம். இந்த திட்டத்தில் ஐந்து ஆண்டுகள் வரை தொடர்ந்து சேமிக்க முடியும். இதன் குறைந்தபட்ச டெபாசிட் தொகையாக ரூ.100 செலுத்தலாம். குறிப்பாக, இந்த திட்டத்தில் திட்டத்திற்கான காலம் முடிவதற்குள், சேமிப்பு பணத்தை எடுக்க முடியாது.

சுகன்யா சம்ரித்தி யோஜனா

பெண் குழந்தைகளுக்கான இந்த திட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளைக் கொண்ட பெற்றோர், குழந்தைகள் 10 வயது அடையும் வரை முதலீடு செய்யலாம். அதன் படி, குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ.1,000 மற்றும் அதிகபட்ச வைப்புத் தொகையாக ரூ.1.5 லட்சம் ஆகும். மேலும், இதில் 7.6% வட்டி விகிதத்தில் சேமிப்பு தொகை வழங்கப்படுகிறது.

குறிப்பாக, குழந்தைகள் 18 வயதாகும் வரை இந்த தொகையைத் திரும்பப் பெற முடியாது. அதே போல 21 ஆன பிறகு இந்தத் திட்டம் முதிர்வுப் பலன்களை அளிக்கிறது.

இந்த திட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஒரு குறிப்பிட்ட வயது முதலே, தொடங்கலாம். மேலும், இது போன்ற ஒரு சில திட்டங்களின் மூலம் பெண் குழந்தைகளை நேரடியாக தங்கள் சேமிப்பை ஆரம்பிக்க முடியும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Post Office Schemes for Girl Child Above 10 years | Post Office Scheme to Double the Money | Post Office Scheme for Girl Child calculator | Post Office Monthly income Scheme | Post Office Scheme 2022 | Boy Child Scheme in Post Office | Post Office Savings Scheme | Post Office Schemes for Girl Child Above 10 years | Post Office Schemes for Girl Child Below 10 years | Post Office Schemes for Girl Child in India | Post Office Schemes for Girl Child in Tamil | Government Post Office Schemes for Girl Child | Post Office Schemes for baby Girl Child | Which is the Best Scheme in Post Office for Girl Child | Best Post Office Schemes for Girl Child | Indian Post Office Schemes for Girl Child | Post Office Schemes 2022 for Girl Child | Best Child Scheme in Post Office | Girl Child Post Office Scheme Details | Postal Schemes for Girl Child | Post Office Fixed Deposit Interest rates 2022


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்