திமுக அரசு ஆட்சியை பிடிக்கும் போது பல வாக்குறுதிகளை வெளியிட்டது. அவற்றுள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்தது "புதுமைப் பெண் திட்டம்". இது முற்றிலும் பெண்கள் கட்டாயம் கல்வி பெற வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவான திட்டமாகும். இத்திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடந்த நிகழ்வில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் வறுமையைக் காரணமாகக் கொண்டு பல குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். மேலும் பெண் குழந்தைகளை சிறு வயதிலையே குழந்தைத் திருமணம் செய்து வைக்கின்றனர். இவற்றை தடுக்க, பெண் குழந்தைகளுக்கு சம்பாதிக்கும் வாய்ப்பை ஏற்படுத்த மற்றும் சமுதாயத்தில் அவர்களுக்கு பொருளாதார பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையில் புதுமைப்பெண் திட்டத்தை அறிவித்தார் மு.க. ஸ்டாலின். இத்திட்டத்தின் மூலம் 6 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மாதம் ரூ.1000/- உதவித்தொகை வழங்கபடும் என்று தெரிவித்தார்.
இத்திட்டத்தின் முதல் கட்டத் தொகையால் 1,16,342 மாணவிகள் பயனடைந்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது. கல்வியை பாதியில் நிருத்திய 12,000 மாணவிகள் இத்திட்டத்தால் மீண்டும் கல்வி பயில தொடங்கிவிட்டதாகவும் கூறுகின்றனர். பட்டாபிராமில் உள்ள இந்து கல்லூரியில், புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் 1,04,347 மாணவிகள் பயன்பெறுவார்கள் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…