Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

SBI Home Loan Scheme 2022: எஸ்பிஐ வெளியிட்ட புதிய அறிவிப்பு..! மனைவியின் பெயரில் வீடு கட்டுவோருக்கு அமோக சலுகை

Gowthami Subramani June 16, 2022 & 16:20 [IST]
SBI Home Loan Scheme 2022: எஸ்பிஐ வெளியிட்ட புதிய அறிவிப்பு..! மனைவியின் பெயரில் வீடு கட்டுவோருக்கு அமோக சலுகைRepresentative Image.

SBI Home Loan Scheme 2022: இந்தியாவில் பல்வேறு பொதுத்துறை வங்கிகள் வீடு கட்டுவதற்காக கடன் வழங்கி வருகிறது. அந்த வகையில் குறிப்பாக மனைவியின் பெயரில் வீடு கட்ட வேண்டும் என விரும்புபவர்களுக்குச் சிறப்பான சலுகை வழங்கப்படுகிறது. அதன் படி, உங்கள் மனைவி வேலைக்குச் செல்பவராயின் இந்த சலுகையை நிச்சயம் பெற முடியும் (SBI Home Loan Scheme 2022).

கனவை நனவாக்க

சொந்த வீடு என்பது எல்லோரும் விரும்புவதில் ஒன்று. அந்த வகையில், சொந்த வீடு கட்டும் கனவை நனவாக்க, பல்வேறு நிலையில் போராடி வருகின்றனர். அதில் ஒன்று வங்கிகளில் கடன் வாங்குவது. அதன் படி, வங்கிகளில் வீடு கட்டுவதற்காக வாங்கப்படும் கடன்களில், எஸ்பிஐ வங்கி மிகக் குறைந்த அளவிலான வட்டியில் தருகிறது (SBI Housing Loan Interest Rate for Women).

அதுவும், இப்போதெல்லாம் வீடு கட்டுவதற்கு ஆகும் செலவு மிக அதிகமாக உள்ளது. அதற்கு வீடு கட்டத் தேவையானப் பொருள்களின் விலை உயர்வும் ஆகும் (SBI Rate of Interest). மேலும், கைவசம் சிறியத் தொகை நம்மிடம் இருந்தால் போதும். அதை வைத்துக் கொண்டு வீட்டுக்கான கடனை வாங்கி வீடு கட்டி விடலாம். வீடு கட்டுவதற்காக எஸ்பிஐ வங்கி குறைந்த வட்டியில் வீட்டுக் கடனை வழங்குகின்றன (SBI Home Loan Interest Rate in Tamil).

குறைந்த வட்டி மட்டுமல்லாது, வீட்டுக் கடன் வாங்குவோர்க்கு சிறப்புச் சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் பெண்களுக்கு சலுகை முறையில் ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா இப்படி ஒரு சலுகையை அறிவித்துள்ளது (SBI Schemes for Women).

வீட்டுக்கடன் பெற தகுதி (SBI Home Loan for Womens Eligibility)

இவ்வாறு குறைந்த அளவில் வட்டிக்குத் தரக்கூடிய வீட்டுக்கடன் பெறும் நபர்கள் 18 வயது முதல் 70 வயது வரை இருக்கலாம். இவர்கள் இந்த சிறப்பான வாய்ப்பைப் பயன்படுத்தி, கடன் தொகைகளைப் பெறலாம். மேலும், இதில் கடன் தொகைக்கான காலம் மொத்தம் 30 ஆண்டுகள் ஆகும் (SBI Home Loan Eligibility).

மேலும், கடன் தொகை பெறக் கூடிய மனைவிகள் கண்டிப்பாக வேலைக்குச் செல்பவர்களாக இருக்க வேண்டும் (Interest Rate of SBI Bank in Tamil).

குறைந்த வட்டி

இந்த சிறப்பான சலுகையின் மூலம் வாடிக்கையாளர்கள், மிகக் குறைந்த வட்டியில் கடன் பெறலாம். ஆனால், இவ்வாறு குறைந்த வட்டிக்குக் கடன் தொகை பெறும் நபர்களின் கிரெடிட் ஸ்கோர் அளவைப் பொறுத்தே இந்த சலுகையில் கடன் தொகை பெற முடியும் (SBI Latest Scheme2022).

அதன் படி, இந்த ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில், வீட்டுக் கடன்களை 6.65 சதவீத வட்டியில் வாங்கலாம் (SBI Interest Rate for Married Women). மேலும் பெண்களுக்கு இதற்கான செயல்பாட்டுத்திறன் குறைவாக இருக்கும். இதில் கூடுதல் கட்டணங்கள் எதுவும் இல்லை. வேலைக்குச் செல்லும் திருமணமான பெண்கள் இந்த சிறப்பான வாய்ப்பைப் பயன்படுத்தி குறைந்த வட்டியில் கடன் தொகை பெறலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்