Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
0.00sensex(0.00%)
நிஃப்டி22,402.40
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

SBI vs Post Office: எது பெஸ்ட்… எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்..?

Gowthami Subramani Updated:
SBI vs Post Office: எது பெஸ்ட்… எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்..?Representative Image.

வருங்காலத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாக வாழ்வதற்கு, நாம் நிகழ்காலத்தில் இருந்தே அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொதுவாக, வாழ்நாளில் நாம் ஈட்டும் பணத்தை சேமிப்பு அல்லது முதலீடாகச் சேர்க்கலாம். அந்த வகையில், நாம் பணத்தை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்து சேமிப்பதும் அவசியமாகும். இவ்வாறு பணத்தை முதலீடு செய்து சேமிப்பதற்கு நிறைய திட்டங்கள் உள்ளன. தபால் நிலையம், வங்கிகளில் பணத்தை முதலீடு செய்து சேமிப்பர்.

SBI vs Post Office: எது பெஸ்ட்… எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்..?Representative Image

SPI vs Post Office

இருப்பினும், வங்கி அல்லது போஸ்ட் ஆபிஸில் எந்த திட்டத்தில் இணையலாம் என்ற குழப்பங்கள் இருக்கும். எந்த வகை திட்டமாக இருப்பினும், நாம் பெரிதும் ஆலோசிக்க வேண்டியது நல்லது. எந்த திட்டத்தில் அதிக பயன்கள் கிடைக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில், நாட்டில் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியாக செயல்படும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவர். சிலர், தபால் நிலையங்களில் முதலீடு செய்து சேமிக்க விரும்புவர். இதில், எந்த திட்டம் பயனுள்ளது என்பதைப் பற்றிக் காணலாம்.

SBI vs Post Office: எது பெஸ்ட்… எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்..?Representative Image

எஸ்பிஐ ஃபிக்ஸ்டு டெபாசிட் (SBI Fixed Deposit)

நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியாக விளங்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தனது வாடிக்கையாளர்களுக்கு நிலையான வைப்புத் தொகை மூலம் முதலீடு விருப்பத்தை வழங்குகிறது. மேலும், இதன் நிலையான வட்டி விகிதங்களை சில முறை அதிகரித்தும் வருகிறது. இவ்வாறு வட்டி விகிதங்களை உயர்த்துவதன் மூலம், அவர்களது நிலையான வைப்புத் தொகைக்கான வட்டியும் அதிகரிக்கும்.

SBI vs Post Office: எது பெஸ்ட்… எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்..?Representative Image

போஸ்ட் ஆபிஸ் ஃபிக்ஸ்டு டெபாசிட்

தபால் அலுவலகமானது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பான வசதிகளை வழங்குகிறது. அந்த வகையில், போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் இணைந்து டெபாசிட் செய்வதன் மூலம், அதற்கான வட்டியும் வழங்குகிறது. இதன் மூலம், ஃபிக்ஸ்டு டெபாசிட் செய்வதால் நல்ல லாபம் கிடைக்கும். சமீபத்திய அறிக்கையில் வெளியிட்டதாவது, போஸ்ட் ஆபிஸில் 3 வருட கால நிலையான வைப்புத் தொகைக்கு 5.8% வட்டியும், 5 வருட கால டெபாசிட்டில் 6.7% வட்டியும் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த இரண்டு திட்டங்களுமே, மக்களுக்கு மிகுந்த பலனை அளிக்கக் கூடியதாக உள்ளது. இதில் எந்த திட்டத்தில் வேண்டுமென்றாலும் இணைந்து பயன்பெறலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்