Tue ,Dec 05, 2023

சென்செக்ஸ் 68,865.12
1,383.93sensex(2.05%)
நிஃப்டி20,686.80
418.90sensex(2.07%)
USD
81.57
Exclusive

School Students Schemes: பள்ளி மாணவிகளுக்கு ஒரு புதிய அப்டேட்…! ரூ.1000 நிதி குறித்த அறிக்கை..!

Gowthami Subramani June 15, 2022 & 16:45 [IST]
School Students Schemes: பள்ளி மாணவிகளுக்கு ஒரு புதிய அப்டேட்…! ரூ.1000 நிதி குறித்த அறிக்கை..!Representative Image.

School Students Schemes: பள்ளி மாணவிகளுக்கு உயர்கல்வி உறுதித்தொகையாக ரூ. 1,000 வழங்கப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், சிலர் இந்த தொகை எப்போது மாணவிகளுக்குக் கிடைக்கும் என்ற விவரங்களைப் பற்றி இந்தப் பகுதியில் காண்போம் (School Students Schemes).

உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம்

ஆண்டுதோறும், ஜூன் மாதம் 15 ஆம் நாளன்று, உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுகிறது. அவ்வாறு இன்று சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு குறித்தான விழா நடைபெற்றது. இந்த விழாவில், சமூக நலத்துறை அமைச்சராக விளங்கும் கீதா ஜீவன் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், ரூ. 1000 நிதியைக் கொடுத்த அப்டேட்டைக் கொடுத்துள்ளார் (Central Government Schemes in Tamilnadu).

மாணவர்களுக்குச் சிற்றுண்டி

இந்த விழாவின் நிறைவில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள், முதியோர்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் படி, முதியோர் இல்லங்களே இருக்கக் கூடாது என்பதே அரசி எண்ணம் என்றும் கூறியுள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து பேசியதில், 1-5 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு காலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார் என கூறியுள்ளார் (School Students Schemes in Tamil).

உயர்கல்விக்கான தொகை

மேலும், பள்ளிகளில் மாணவிகளுக்கு உயர்கல்வி பயில்வதற்கான ரூ. 1000 வழங்குவது தயார் நிலையில் உள்ளது. மேலும், கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்குக் கல்லூரிகள் திறக்கப்பட்ட உடனே, ரூ.1,000 உறுதித்தொகையாக நேரடியாக மாணவிகளுக்குச் செல்லும் படி, அவர்களின் வங்கிக் கணக்குக்கு அனுப்பப்படும் எனவும் தெரிவித்தார்.

அதன் படி, மாணவியருக்கு ஊதியத் தொகையாக ரூ. 1000 வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்(Tamilnadu State Government Scheme).

இதனால், அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர். மேலும், பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை அவர்களின் உயர்கல்விப் படிப்புக்கு உதவும் என நம்பப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்