Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

வீட்டுக் கடன் வட்டி வகைகள் இத்தனை இருக்கிறதா? நமக்கு எது சரியா இருக்கும்! | Home Loan Interest Rate Types

Priyanka Hochumin Updated:
வீட்டுக் கடன் வட்டி வகைகள் இத்தனை இருக்கிறதா? நமக்கு எது சரியா இருக்கும்! | Home Loan Interest Rate TypesRepresentative Image.

சொந்த வீடு வாங்க எண்ணுபவர்கள் வீட்டுக் கடன் வாங்காமல் அந்த கனவை நிறைவேற்ற முடியாது. அந்த நிலையில் இருக்கிறது இந்த காலத்தின் விலை வாசி ஏற்றம். வீட்டு மனை, கட்டிட பொருட்கள், கூலி என்று நிறைய செலவுகள் இருக்கிறது. இதனை ஈடு கட்ட இருக்க ஒரே வழி வீட்டுக் கடன் வாங்குவது தான். நமக்கு இப்போதெய்க்கு வீடு காட்டினால் போதும் என்ற மனப்பானை உங்ளைடம் இருந்தால் அதை முற்றிலுமாக மாற்றிக்கொள்ளுங்கள். ஏனெனில் நாம் கடன் வாங்குவதை விடு முக்கியமானது அதற்கு வட்டி கட்டுவது தான். அப்படி வாங்கிய கடனுக்கு மொத்தமாக வடியும் அசலும் செலுத்தினால் மட்டுமே அந்த வீடு நமக்குச் சொந்தம்.

இந்த பதிவில் வீட்டுக் கடனுக்கான வட்டியில் என்னென்ன வகைகள் இருக்கிறது, வட்டி எப்போதெல்லாம் குறையும் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பாப்போம்.

வீட்டுக் கடன் வட்டி வகைகள் இத்தனை இருக்கிறதா? நமக்கு எது சரியா இருக்கும்! | Home Loan Interest Rate TypesRepresentative Image

வீட்டுக் கடன் வட்டி குறைப்பு

நாம் வீட்டுக் கடன் வாங்கும் தொகைக்கான வட்டி ஆண்டுக்கு ஒரு முறை, மாதத்திற்கு ஒரு முறை மற்றும் தினசரி குறைப்பு என்று பல வகையில் வட்டி கணக்கிடப்படுகிறது.

ஆண்டு வட்டி குறைப்பு

நாம் வாங்கிய வீட்டுக் கடன் தொகைக்கு மாத தவணை கட்டி வருவோம். அதில் குறிப்பிட்ட தொகையானது வட்டிக்கும், மீத தொகையை அசலாகவும் கழியும். இப்படி ஒரு ஆண்டு முழுக்க நாம் கட்டிய தொகையில் இருந்து அசல் குறைக்கப்படும். அப்படி ஒரு ஆண்டின் இறுதியில் கணக்கிடும் போது, கட்டிய தொகையில் இருந்து மீதம் உள்ள தொகை தான் அடுத்த ஆண்டுக்கான அசல் தொகையாக நிர்ணயிக்கப்படும்.

உதாரணமாக, ரூ. 20 லட்சம் வீட்டுக் கடனாக வாங்கினால் அதற்கான வட்டி தான் ஆண்டு முழுக்க கட்டி வருவோம். அந்த ஆண்டு முடிந்த பிறகு, கட்டிய அசல் தொகையை கழித்து கணக்கிடுவார்கள். அதில் பாக்கி இருக்கும் தொகை தான் அடுத்த ஆண்டுக்கான அசல், அதற்கான வட்டி கணக்கிடப்படும்.

மாத வட்டி குறைப்பு

அதே போல தான், ஆனால் இங்கு ஒவ்வொரு மாதமும் வட்டி குறைக்கப்படும். நாம் வாங்கிய வீட்டுக் கடன் தொகைக்கு கடும் வட்டியில் அசல் தொகை குறைக்கப்படும். பாக்கி உள்ள அசல் தொகைக்கு மட்டும் வட்டி காட்டினாள் போதும்.

தினசரி வட்டி குறைப்பு

இதில் தினமும் செலுத்தும் வட்டிக்கு ஏற்ப அசல் தொகை குறைக்கப்படுகிறது. மேலும் நாம் செலுத்தும் வட்டி தொகையும் குறைவாக இருக்கிறது.

வீட்டுக் கடன் வட்டி வகைகள் இத்தனை இருக்கிறதா? நமக்கு எது சரியா இருக்கும்! | Home Loan Interest Rate TypesRepresentative Image

வீட்டுக் கடன் வட்டி வகைகள்

நாம் வாங்கிய வீட்டுக் கடனுக்கு மாத தவணை செலுத்துவதில் நிலையான வட்டி (Fixed), மாறுபட்ட வட்டி (Floating) மற்றும் கலவை வட்டி (Mixed or Hybrid) என்று மூன்று வகைகள் உள்ளது.

நிலையான வட்டி விகிதம்

நிலையான வட்டி விகிதம் என்பது, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் கட்டி முடிக்கும் வரை நிலையாகவே இருக்கும். ஆனால் இந்த கால கட்டத்தில் அப்படி இல்லை. வீட்டுக் கடனுக்கான நிலையான வட்டி விகிதம் என்பது 3 முதல் 5 ஆண்டுகள் வரை நிலையாக இருக்கும். அதற்கு பின்பு மாறுபடும் வட்டி விகிதத்திற்கு ஏற்ப மாறுபடும். இந்த குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகு நமக்கு தேவைப்பட்டால் மீண்டும் நிலையான வட்டி விகிதத்திற்கு மாற்றிக்கொள்ள முடியும்.

வீட்டுக் கடன் வட்டி வகைகள் இத்தனை இருக்கிறதா? நமக்கு எது சரியா இருக்கும்! | Home Loan Interest Rate TypesRepresentative Image

மாறுபடும் வட்டி விகிதம்

இந்த வட்டி விகிதமானது முற்றிலும் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா கையில் தான் இருக்கிறது. நாட்டின் நிதிநிலைக்கு ஏற்ப ஆர்.பி.ஐ வட்டி விகிதத்தை மாற்றி அமைக்கும். ஆர்.பி.ஐ வட்டி விகிதத்தை அதிகரித்தால், வட்டி அதிகமாகும், அதே போல் வட்டி விகிதத்தை குறைத்தால் நமக்கும் வட்டி குறையும். மேலும் ரிசர்வ் வங்கி ஒட்டு மொத்தமாக வட்டியை அதிகரிக்காது. அப்படியே அதிகரித்தாலும் அது நிலையான மற்றும் மாறுபடும் வட்டி விகிதம் இரண்டையுமே அதிகரிக்கும்.

சரி, இப்போது நாம் மாறுபட்ட வட்டி விகிதத்தை தேர்வு செய்த பின்னர் ஆர்.பி.ஐ வட்டி விகிதத்தை அதிகரித்தால், நாம் செலுத்தும் மாத தவணையில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால் கடன் தொகை செலுத்தும் காலம் அதிகரிக்கும். உங்களுக்கு சீக்கிரம் வட்டி கட்டி முடிக்க விரும்பினீர்கள் என்றால், மாத தவணை கட்டும் தொகையில் கூடுதல் கட்டணம் செலுத்தி அல்லது பகுதிப் பணம் எனக் கட்டி அசலை குறைக்கலாம்.

வீட்டுக் கடன் வட்டி வகைகள் இத்தனை இருக்கிறதா? நமக்கு எது சரியா இருக்கும்! | Home Loan Interest Rate TypesRepresentative Image

கலவை வட்டி விகிதம்

வீட்டுக் கடனாக நாம் வாங்கும் தொகையில் ஒரு பகுதி நிலையானதாகவும், மீதி மாறுபடும் வட்டி தொகையைக் கொண்டதாக இருந்தால் அது கலவை வட்டி விகிதமாகும். உதாரணமாக, நீங்கள் ஏதேனும் வங்கி, நிதி நிறுவனம் அல்லது வீட்டு வசதி நிறுவனத்தில் வீட்டுக் கடன் வாங்குகிறீர்கள். மொத்தம் கடன் தொகை ரூ.30 லட்சம் என்றால், அதில் ரூ.20 லட்சம் நிலையான வட்டி மற்றும் ரூ.10 லட்சம் மாறுபடும் வட்டி தொகையாக நம்மால் வாங்க முடியும்.

ஆர்.பி.ஐ அறிவித்த படி வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, ஆர்.பி.ஐ வட்டி விகிதத்தை அதிகரித்தால் நமக்கான வட்டியும் அதிகரிக்கும். வட்டி குறைக்கப்பட்டால் நமக்கும் வட்டி குறையும். 

வீட்டுக் கடன் வட்டியைப் பொறுத்த வரை, சம்பாதிப்பவர்களை விட சுய தொழில் செய்பவர்களுக்கு 0.10% - 15% வரை வட்டி அதிகமாக நிர்ணயம் செய்யப்படுகிறது. இதுவே பெண்கள் பெயரில் வீட்டுக் கடன் வாங்கினால் வட்டியில் 0.05% சலுகை கிடைக்கும்.

வீட்டுக் கடன் வட்டி வகைகள் இத்தனை இருக்கிறதா? நமக்கு எது சரியா இருக்கும்! | Home Loan Interest Rate TypesRepresentative Image

கடன் கட்டும் காலம்

இதுவரை வீட்டுக் கடன் செலுத்தும் வங்கி அல்லது நிறுவனங்கள் வாங்கிய கடனை 20 ஆண்டுகள் வரை கட்ட அனுமதித்தனர். ஆனால் இப்போது 30 ஆண்டுகள் வரை வீட்டுக் கடனை செலுத்த அனுமதிக்கின்றனர். இது என்னவோ கடன் வாங்குபவர்களுக்கு நல்ல செய்தி தான், ஏனெனில் மாத தவணை குறைவாக இருக்கும். ஆனால், நாம் செலுத்தும் வட்டி அதிகரிப்பதால் 30 ஆண்டுகள் வரை கடன் அடைப்பது தவறான யோசனை.

இப்போது ஒரு உதாரணத்திற்கு, ரூ.30 லட்சம் வீட்டுக்கான வாங்குகிறோம், 8% வட்டி என்றால் - நாம் 20 ஆண்டுகள் கட்டுவோம் எனில் மாத தவணை ரூ. 25,093 மற்றும் வட்டித் தொகையானது ரூ. 30,22,368/- ஆகும். இதுவே 30 ஆண்டுகள் காட்டுவோம் எனில், மாத தவணை ரூ. 22,013/- மற்றும் வட்டித் தொகை ரூ.49,24,657/- ஆகும்.

வீட்டுக் கடன் வட்டி வகைகள் இத்தனை இருக்கிறதா? நமக்கு எது சரியா இருக்கும்! | Home Loan Interest Rate TypesRepresentative Image

சரி இப்போ எந்த வகையான வட்டியை தேர்வு செய்வது நமக்கு லாபகரமாக இருக்கும். வீட்டுக் கடனுக்கான வட்டி வரும் காலத்தில் வட்டி இன்னும் அதிகரித்தால் நிலையான வட்டியைத் தேர்வு செய்வது நல்லது. இதுவே வீட்டுக் கடன் வட்டி குறையப்படும் என்றால் மாறுபடும் வட்டி தேர்வு செய்வது புத்திசாலித்தனம். சரி அது உயருமா, குறையுமா என்று தெரியாமல் இருந்தால் கலவை வட்டி தேர்வு செய்வது உத்தமம். அப்படி இல்லை என்றால் உங்களுக்கு எது சரியாகப் படுகிறதோ அதை தேர்வு செய்துகொள்ளுங்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்