Wed ,Nov 30, 2022

சென்செக்ஸ் 62,714.55
209.75(0.34%)
நிஃப்டி18,630.10
67.35(0.36%)
USD
81.57
Exclusive

இந்தியா இனி இதில் கிடையாது… அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு….!

Gowthami Subramani November 12, 2022 & 13:10 [IST]
இந்தியா இனி இதில் கிடையாது… அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு….!Representative Image.

நவம்பர் 11 ஆம் நாள், அமெரிக்க கருவூலத்துறை வெளியிட்டதாவது, அமெரிக்காவின் நாணய கண்காணிப்புப் பட்டியலில் இருந்து, இத்தாலி, மெக்சிகோ, தாய்லாந்து, மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவையும் நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியா இனி இதில் கிடையாது… அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு….!Representative Image

நாணய கண்காணிப்புப் பட்டியல் எதற்கு?

கண்காணிப்புப் பட்டியல் பொதுவாக ஒழுங்கு முறை இல்லாமல் செயல்படுவதைக் கண்காணிக்கும் விதமாகக் கருதப்படுவதாகும். அதன் படி, அமெரிக்கா தன்னுடன் வர்த்தகம் செய்யக் கூடிய நாடுகளில், ஏதேனும் வர்த்தகக் கொள்கை அல்லது நடவடிக்கை ஸ்திரத் தன்மையால் இல்லாமல் இருக்கும் சமயத்தில் அதன் கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்கும். இதில், நாணய நடைமுறைகள் மற்றும் மேக்ரோ பொருளாதாரக் கொள்கையை அமெரிக்கா கூர்ந்து கவனிக்கும். இவ்வாறே, அமெரிக்காவின் நாணயக் கண்காணிப்புப் பட்டியலில் கடந்த 2 ஆண்டுகளாக இந்தியா இடம் பெற்றிருந்தது.

இந்தியா இனி இதில் கிடையாது… அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு….!Representative Image

இந்தியா இனி இதில் இல்லை

நவம்பர் 11 ஆம் நாள் வெள்ளிக்கிழமை புதுதில்லியில், அமெரிக்க – இந்திய வணிகங்கள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் நிகழ்வில் கருவூலச் செயலர், நிதியமைச்சர் உள்ளிட்டோர் இருந்துள்ளனர். இதில் கருவூலச் செயலர் ஜேனட் யெலன், நிர்மலா சீதாராமனுடன் பேசிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, அமெரிக்காவின் கருவூலத்துறை அதன், நாணய காப்புப் பட்டியலில் இருந்த் இந்தியாவை நீக்கியுள்ளது.

இந்தியா இனி இதில் கிடையாது… அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு….!Representative Image

பட்டியலில் உள்ள நாடுகள்

இதனைத் தொடர்ந்து, தற்போது கண்காணிப்புப் பட்டியலில் உள்ள நாடுகள் சீனா, ஜப்பான், கொரியா, ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர், மற்றும் தைவான் உள்ளிட்ட 7 நாடுகள் ஆகும். இவ்வாறு அமெரிக்கக் கருவூலத் துறை தனது இரு ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாடுகள் தொடர்ச்சியாக மூன்று வர்த்தக நிபந்தனைகளில் ஒன்றை மட்டுமே சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்நிய செலவாணி தலையீட்டை வெளியிடாமல் இருத்தல் மற்றும் அதன் செலவாணி விகித வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருத்தல் உள்ளிட்டவற்றால் சீனா இந்தப் பட்டியலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியா இனி இதில் கிடையாது… அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு….!Representative Image

கருவூலம் மதிப்பாய்வு செய்தல்

ஜூன் 2022 வரையிலான நான்கு காலாண்டுகளில், அமெரிக்காவின் முக்கிய வர்த்தக கொள்கைகளை கருவூலம் மதிப்பாய்வு செய்துள்ளது. பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு, கணிசமான இருதரப்பு வர்த்தக உபரியின் காரணமாக, இந்தியாவை அமெரிக்கக் கருவூலத் துறை நீக்கி, இந்தியாவை நாணய கையாள்வோரின் கண்காணிப்புப் பட்டியலில் தற்போது சேர்த்துள்ளது. கொரோனா தொற்று நோய் காலம் தொடங்கியது முதல், இந்தியா இந்தப் பட்டியலில் இடம்பிடிப்பது மூன்றாவது முறையாகும். இதனால், அமெரிக்காவிற்கு இந்தியா மீதான பொருளாதார சந்தேகம் நீங்கியுள்ளது உறுதியாகிறது. மேலும், அமெரிக்கா செய்த இந்த மாற்றத்தால் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வணிகம் மேம்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: பெண்களே.. கவலை வேண்டாம்… இன்னைக்கு தங்கம் விலை குறைஞ்சிடுச்சி…!

Tag: What Is Currency Monitoring List | Currency Monitoring List In Tamil | Us | Currency Monitoring List | India Removed From The List | Us Treasury List | US Removed India From The List | Is Good Or Bad Of Removing India From Currency Monitoring List | அமெரிக்கா | நாணய கண்காணிப்பு பட்டியல் | இந்தியா பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது | அமெரிக்க கருவூல பட்டியல் | அமெரிக்கா இந்தியாவை பட்டியலிலிருந்து நீக்கியது | நாணயக் கண்காணிப்புப் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கம் | இந்தியா கண்காணிப்புப் பட்டியலில் இருந்து நீக்கம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

BEST DEALS AND DISCOUNTS