இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் ரூபாயின் முதல் சோதனை இன்று முதல் அதாவது நவம்பர் மாதம் 1 ஆம் நாள் முதல் தொடங்குகிறது. இந்த சோதனையில், அரசு பத்திரங்களில் இரண்டாம் நிலை சந்தை பரிவர்த்தனைகள் தீர்க்கப்படும் எனக் கூறப்பட்டது. இதற்கு, ரிசர்வ் வங்கியானது, டிஜிட்டல் நாணயம் அறிமுகப்படுத்தும் திட்டத்தைத் தொடங்க சோதனையை தொடங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தது.
இந்த டிஜிட்டல் ரூபாய் சோதனையில், மொத்த விற்பனை பரிவர்த்தனைகளுக்காக ஒன்பது வங்கிகள் பங்கேற்கின்றன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மற்றும் எச்எஸ்பிசி போன்ற வங்கிகள் பங்கேற்பதாகக் கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கியின், இந்த டிஜிட்டல் நாணயத்திற்கான ஒப்பந்தங்கள், செட்டில்மென்ட் செலவைக் குறைக்கும் எனவும் கூறியுள்ளது.
இந்த டிஜிட்டல் ரூபாய்க்கான முதல் சோதனை ஒரு மாதத்திற்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்களைக் கொண்ட பயனர் குழுக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் சோதனை நடப்படும் எனவும், எதிர்கால பைலட் சோதனைகளில் மற்ற மொத்த பரிவர்த்தனைகளும் கவனிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், இதன் மூலம் எல்லை தாண்டிய கொடுப்பனவுகளும் கவனிக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
மத்திய வங்கி அறிமுகப்படுத்திய டிஜிட்டல் நாணயம் என்பது, ஒரு நாட்டின் முக்கிய நாணயத்தின் டிஜிட்டல் வடிவம் ஆகும். இது, மத்திய வங்கியால் வெளியிடப்படுவதுடன் ஒழுங்குபடுத்தவும்படுகிறது. இந்த மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (Central Bank Digital Currency - CBDC) நிதிச் சேர்க்கையுடன் பணம் செலுத்தும் திறனை அதிகரிப்பதாகவும் அமைகிறது. சர்வதேச கட்டண விருப்பங்களை மேம்படுத்துவதுடன், தூய பரிவர்த்தனைகள் செலவைக் குறைக்கிறது. இதன் காரணமாக பணம் அனுப்பும் போது ஏற்படும் செலவு குறையும் எனவும் உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
இது குறித்து நாணய நிபுணர்கள் கூறுகையில், இ-ரூபாய் டோக்கன் அடிப்படையில் இருப்பதாகவும், இதன் மூலம் ஒருவர் யாருக்கு பணம் அனுப்ப விரும்புகிறாரோ அந்த நபரின் பொதுவான ஐடி மூலம் அனுப்பலாம். இது பொதுவாக இமெயில் ஐடி போல இருக்கலாம் எனவும், பணம் அனுப்பும் போது Password-ஐ உள்ளிட வேண்டும் எனக் கூறப்படுகிறது. இதற்கு இணையம் தேவையில்லை எனவும், இணையத்தைப் பயன்படுத்தாமலும் இ-ரூபாய் செயல்பாட்டில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்த விரிவான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
மத்திய வங்கியின் சார்பில், அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் நாணயத்தை வெளியிடும் முதல் நாடாக இந்தியா உள்ளது. முன்னரே, துபாய், ரஷ்யா, ஸ்வீடன், ஜப்பான், வெனிசுலா, எஸ்டோனியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் சொந்த கிரிப்டோகரன்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…