Mon ,Dec 04, 2023

சென்செக்ஸ் 68,865.12
1,383.93sensex(2.05%)
நிஃப்டி20,686.80
418.90sensex(2.07%)
USD
81.57
Exclusive

டிசிஎஸ், ஹெச்சிஎல்-ஐ விட குறைந்த விப்ரோவின் வளர்ச்சி.. சரிவுப் பாதையில் செல்கிறதா விப்ரோ?

Gowthami Subramani October 13, 2022 & 13:10 [IST]
டிசிஎஸ், ஹெச்சிஎல்-ஐ விட குறைந்த விப்ரோவின் வளர்ச்சி.. சரிவுப் பாதையில் செல்கிறதா விப்ரோ?Representative Image.

இரண்டாவது காலாண்டின் வருமானத்தின் அடிப்படையில் விப்ரோ நிறுவனத்தின் வருமானம் 9 சதவீதம் சரிந்து ரூ.2660 கோடியாக உள்ளது. அதே நேரத்தில், இந்த நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 14.6% ஆக உள்ளது.

இந்தியாவின் மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியலில் 4 ஆவது பெரிய நிறுவனமாக விளங்குவது, விப்ரோ நிறுவனம் ஆகும். பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், ஐடி துறையின் வளர்ச்சி 15.1% ஆக உள்ளது. அதே சமயம், ஐடி துறையில் வருவாய் வளர்ச்சி என்பது 4.1% ஆக உள்ளது.

மேலும் டிஜிட்டல் துறையில் இதன் வளர்ச்சி தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் இருக்கும் என நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். பொருளாதார மந்த நிலை காரணமாக, பெரும்பாலும் ஐடி நிறுவனங்களின் வளர்ச்சியும் குறைந்து கொண்டே வருவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், ஐடி துறையில் விப்ரோ நிறுவனத்தின் லாபமும் குறைந்து வருகிறது. இருப்பினும், டிசிஎஸ், ஹெச்சிஎல் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, விப்ரோ நிறுவனத்தின் வளர்ச்சி குறைவாக உள்ளது.

இந்த சரிவு அடுத்த காலாண்டிலும் தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளதாக, விப்ரோ சிஇஒ தெரிவித்துள்ளார். அதே சமயம், ஐடி துறையில் இந்த ஆண்டில் பணியாளர்கள் வெளியேறும் விகிதம் மிக அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது மூன்லைட்டிங் போன்ற காரணங்களினால் அதிக ஊழியர்கள் நிறுவனத்திலிருந்து வெளியேறுகின்றனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டில் விப்ரோ, இரண்டு நிறுவனங்களை வாங்கியுள்ளது. அதன் படி rizing intermediate holdings நிறுவனத்தை 4,000 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

பொருளாதார மந்த நிலை, பணியாளர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட காரணங்களால், விப்ரோ நிறுவனத்தின் வளர்ச்சி பெரிய அளவில் இருக்காது என நிறுவனம் கூறியுள்ளதை முதலீட்டாளர்கள் கருத்தில் கொள்வது அவசியம். இன்றைய பங்குச் சந்தை நிலவரப்படி, பங்கு விலை இன்று 6% சரிந்துள்ளது. அதன் படி, 26ரூ சரிந்து, ரூ.381.25-க்கு வர்த்தகமாகி வருகிறது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்