Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

மாதம் 1,75,000-ற்கும் அதிகமான சம்பளத்தில் வேலைவாய்ப்பு.. தேர்வு வாரியத்தின் அதிரடி அறிவிப்பு…!

Gowthami Subramani October 12, 2022 & 11:40 [IST]
மாதம் 1,75,000-ற்கும் அதிகமான சம்பளத்தில் வேலைவாய்ப்பு.. தேர்வு வாரியத்தின் அதிரடி அறிவிப்பு…!Representative Image.

உதவி மருத்துவ பணியாளர் தேர்வுக்கான விண்ணப்பங்களை, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் படி, 1021 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பணியில் விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதி, தேர்வு செய்யப்படும் முறை உள்ளிட்ட விவரங்களைப் பற்றி இதில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம்

பணியின் பெயர்

உதவி அறுவை சிகிச்சை நிபுணர்

காலிப்பணியிடங்கள்

1,021

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

அக்டோபர் 11, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

அக்டோபர் 25, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

உதவி அறுவை சிகிச்சை நிபுணர்

1,021

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

உதவி அறுவை சிகிச்சை நிபுணர்

நிலை-22: மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், மருத்துவக் கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட எம்.பி.பி.எஸ் பாடநெறியியல் பட்டப்படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.

மேலும், 12 மாதங்களுக்கு குறையாது சுழற்சி முறை உள்ளிருப்பு பயிற்சியை (Compulsory Rotatory Internship) முடித்திருக்க வேண்டும்.

மேலும், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் கீழ், விண்ணப்பதாரரின் பெயர் பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் ஜூலை 01, 2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு

வயது வரம்பு

பட்டியலின, பட்டியலின பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்

அதிகபட்ச வயதுவரம்பு: 59 ஆண்டுகள்

இதர வகுப்பினர்

அதிகபட்ச வயது வரம்பு: 37 ஆண்டுகள்

 

தேர்வு செய்யப்படும் முறை

இதில், கலந்து கொள்ள நினைக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

இவ்வாறு தகுதி பெற்ற நபர்கள், எழுத்துத் தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இதனைத் தொடர்ந்து, எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்

பிரிவு

விண்ணப்பக்கட்டணம்

எஸ்.சி., எஸ்.சி.ஏ., மாற்றுத் திறனாளிகள்

ரூ.500

மற்றவர்கள்

ரூ.1,000

 

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

இதில், Online Application for Assistant Surgeon (General) என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

அந்த பக்கத்தில் உள்ள How to Apply என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

பின் அதில் கொடுக்கபப்ட்டுள்ள முறைகளைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்