BHEL Recruitment 2022: பாரத் நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில், சிவில் துறையில் அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரியத் தேவையான கல்வித் தகுதி, ஊதியத் தொகை மற்றும் இன்னும் சில முக்கிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன (BHEL Recruitment 2022).
இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
முக்கிய விவரங்கள்
நிறுவனத்தின் பெயர் |
Bharat Heavy Electronics Limited |
பணியின் பெயர் |
Engineers and Supervisors |
காலிப்பணியிடங்கள் |
08 |
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி |
ஜூன் 21,2022 |
பணி நிலை |
அறிவிப்பு வெளியானது |
பணி விவரம்
கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (BHEL Job Vacancies).
துறை |
காலிப்பணியிடங்கள் (BHEL Job Vacancy) |
Engineers |
05 |
Supervisors |
03 |
ஊதியத்தொகை
இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (BHEL Jobs 2022).
துறை |
ஊதியத்தொகை / மாதம் |
Engineers |
ரூ. 78,000 |
Supervisors |
ரூ. 43,550 |
மேலும், இதில் தகுதி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு, அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான Mediclaim Policy கிடைக்கப் பெறும்.
கல்வித்தகுதி
இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேன்டும் (BHEL Job Qualification).
பொறியாளர் (FTA-Civil): பொது / OBC / EWS பிரிவுகளின் கீழ் உள்ளவர்கள், ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இருந்து சிவில் இன்ஜினியரிங் படிப்பை 3 ஆண்டு முழு நேரப் படிப்பாகப் படித்துக் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களைப் பெற்றவராக இருக்க வேண்டும். இதே படிப்பில், SC / ST விண்ணப்பதாரர்கள் மொத்தம் 50% மதிப்பெண்களைப் பெற்றிருக்கலாம்.
மேற்பார்வையாளர் (FTA-Civil): இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், பொறியியல் துறையில் முழுநேர இளங்கலை பட்டம் அல்லது சிவில் இன்ஜினியரிங் தொழில்நுட்பம் முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்: விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் (BHEL Job Eligibility).
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் ஜூன் 6, 2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.
துறை |
வயது வரம்பு |
Engineers & Supervisors |
விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது வரம்பாக 45 வயதைக் கொண்டிருக்கலாம். |
விண்ணப்பதாரர்கள் அதிக அனுபவம் பெற்றிருக்கும் சமயத்தில், ஒவ்வொரு வருட அனுபவத்திலும், வயது வரம்பு அதிகரிக்கப்படலாம் (BHEL Job Recruitment).
முக்கிய தேதிகள்
விண்ணப்பப் பதிவு முறைகள் |
நாள் |
ஆன்லைனில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு ஆரம்ப நாள் |
ஜூன் 07, 2022 |
ஆன்லைனில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு முடிவடையும் நாள் |
ஜூன் 21, 2022 |
BHEL, PSWR நாக்பூர் அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட மற்றும் கையொப்பமிடப்பட்ட விண்ணப்பப் படிவங்களைப் பெறுவதற்கான கடைசி நாள் |
ஜூன் 24, 2022 |
தொலைதூரப் பகுதியில் இருந்து, BHEL, PSWR நாக்பூர் அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட மற்றும் கையொப்பமிடப்பட்ட விண்ணப்பப் படிவங்களைப் பெறுவதற்கான கடைசி தேதி |
ஜூன் 27, 2022 |
விண்ணப்பக்கட்டணம்
இதில் விண்ணப்பிக்கும் நபர்கள் ரூ. 200-ஐ திரும்பப்பெற முடியாத செயலாக்கக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
SC / ST / PwBD போன்ற பிரிவாளர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை
இதில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள், மேற்கூறிய பதவிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1:10 என்ற விகிதத்தில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
இந்த விகிதத்தில், விண்ணப்பதாரர்கள் அவர்களின் தகுதியின் அடிப்படையில் நேர்காணலுக்கு ஷார்ட்லிஸ்ட் செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (BHEL Job Recruitment Apply Online).
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
Sr. Deputy General Manager (HR) BHEL,
Power Sector Western Region,
Shree Mohini Complex,
345 Kingsway,
Nagpur – 440 001
அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.
மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…