Tue ,Dec 12, 2023

சென்செக்ஸ் 69,928.53
102.93sensex(0.15%)
நிஃப்டி20,997.10
27.70sensex(0.13%)
USD
81.57
Exclusive

மத்திய அரசு அறிவித்த அட்டகாசமான வேலைவாய்ப்பு..! மாத சம்பளமே இவ்வளவா..?

Gowthami Subramani October 03, 2022 & 11:35 [IST]
மத்திய அரசு அறிவித்த அட்டகாசமான வேலைவாய்ப்பு..! மாத சம்பளமே இவ்வளவா..?Representative Image.

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் படி, இதற்கான கல்வித்தகுதி, ஊதியத்தொகை, மற்றும் அதற்கான சில விவரங்களைப் பற்றி இதில் காண்போம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

மத்திய தொழில் பாதுகாப்புப் படை

பணியின் பெயர்

உதவி துணை காவல் ஆய்வாளர் (Assistant Sub Inspector), காவல் துறை தலைமை காவலர் பதவிகள் (Head Constable - Ministerial)

காலிப்பணியிடங்கள்

540

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

அக்டோபர்  25, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Assistant Sub Inspector (Stenographer)

122

Head Constable (Ministerial)

418

மொத்தம்

540

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Assistant Sub Inspector (Stenographer)

பணி நிலை 5: ரூ.29,200 முதல் ரூ.92,300 வரை

Head Constable (Ministerial)

பணி நிலை 4: ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில், 10, 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 25, 2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

உதவி துணை காவல் ஆய்வாளர் (Assistant Sub Inspector), காவல் துறை தலைமை காவலர் பதவிகள் (Head Constable - Ministerial)

குறைந்தபட்ச வயது: 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது: 25 ஆண்டுகள்

 

வயது தளர்வு

பிரிவு

வயது தளர்வு

பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் பிரிவினர்

நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் 5 ஆண்டுகள் வரை வயது வரம்புச் சலுகை

ஓபிசி பிரிவினர்

3 ஆண்டுகள் வரை சலுகை

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள், உடல் தகுதித் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

பின்னர், திறனறிவுத் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனைக்கு அனுமதிக்கப்படுவர்.

எவ்வாறாயினும், எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே இறுதி பட்டியல் தயார் செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பிறகு, அதில் மேலே கூறப்பட்ட பதவிகளுக்கான அறிவிப்பைப் பார்க்கவும்.

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளைப் பயன்படுத்தி, மேற்கூறிய பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்