Mon ,Apr 22, 2024

சென்செக்ஸ் 73,694.27
605.94sensex(0.83%)
நிஃப்டி22,362.00
215.00sensex(0.97%)
USD
81.57
Exclusive

Current Affairs 2022 in Tamil: ஜூலை 07, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்

Gowthami Subramani July 07, 2022 & 16:45 [IST]
Current Affairs 2022 in Tamil: ஜூலை 07, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்Representative Image.

Current Affairs 2022 in Tamil: ஜூலை மாதம் 7 ஆம் நாளிற்கான நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல், மாநிலங்களை நியமன உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் அந்த வகையில், ராஜ்யசபா நியமன உறுப்பினர்களாக (எம்.பி) பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பிடி உஷா, விஜயேந்திர பிரசாத் (பிரபல திரைப்படக் கதை எழுத்தாளர், இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலியின் தந்தை), வீரேந்திர ஹெக்டே (தர்மசாலா கோவில் நிர்வாக அறங்காவலர்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

எம்.பி.க்களாக இவர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு இவர்கள் புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலே கூறப்பட்ட நான்கு பேரும் Nominated எம்பிக்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் (President of India) வாக்களிக்க மாட்டார்கள். அதே சமயம் Elected Members மற்றும் Nominated Members இருபிரிவு உறுப்பினர்களுமே துணைக்குடியரசுத் தலைவர் (Vice President of India) தேர்தலுக்கு வாக்களிப்பர்.

புற்றுநோயைக் கண்டறிதலுக்கான கருவி

புற்று நோய் இருப்பதைக் கண்டறிய சென்னை ஐஐடி ஆய்வுக் குழுவினர் “பிவோட்” என்ற கருவியை உருவாக்கியுள்ளனர். இது தனி நபருக்கு புற்றுநோயை உண்டாக்கக் கூடிய மரபணுக்களைக் கணிக்கக் கூடியது. இது புற்றுநோய் சிகிச்சை உத்திகளை வகுப்பதிலும் உதவக் கூடியதாக அமையும்.

ஐ.நா. அமைதிப்படை புதிய கமாண்டர்

தெற்கு சூடானில் ஐ.நா. அமைதிப்படையின் புதிய கமாண்டராக மோகன் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.நா படை (United Nations PeaceKeeping Force) அக்டோபர் 24, 1945 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

அக்ரதூத்

அஸ்ஸாமில் இருந்து வெளிவரும் அக்ரதூத் என்ற நாளிதழில் 50-ஆவது ஆண்டு பொன்விழா கொண்டாட்டம் புதன்கிழமை பிரதமர் மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

டைசல் உயிரி தொழில்நுட்ப பூங்கா

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ), டைடல் பார்க் – உடன் இணைந்து டைசல் உயிரி தொழில்நுட்ப பூங்காவை அமைத்துள்ளது.

இந்த பூங்காவில் உயிரி தொழில்நுட்ப முதன்மை மையம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையும் இணைந்து அமைத்துள்ளது.

“வேளாண் உரிமைகளைப் பெறுதல்” மாநாடு

சர்வதேச பொருளாதாரத் தொடர்பு ஆராய்ச்சிக் கவுன்சில் மற்றும் தேசிய பங்குச் சந்தை “வேளாண் உரிமைகளைப் பெறுதல்” என்ற மாநாட்டை நடத்தியது.

2022 ஆம் ஆண்டு மத்திய வேளாண் துறை அமைச்சராக விளங்குபவர் நரேந்திரசிங் தோமர்.

அனைத்து வாகனங்களுக்கு எரிபொருள் சிக்கன தரநிலை

எரிபொருள் சிக்கன தரநிலை காற்று மாசுவைக் குறைக்கும் மற்றும் எரிபொருள் சிக்கன திறன் கொண்ட வாகனங்களை அறிமுகப்படுத்தும்.

இந்த அனைத்து வாகனங்களுக்குமான எரிபொருள் சிக்கன தரநிலை வரும் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய மோட்டார் வாகனச் சட்டம் (CMVR – Central Motor Vehicles Rules) 1989 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Yesterday Current Affairs in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்