Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

ஈரோட்டுக்காரர்களே 20 வருடங்கள் காத்திருப்பு வீண் போகவில்லை!

Udhayakumar January 10, 2022 & 14:45 [IST]
ஈரோட்டுக்காரர்களே 20 வருடங்கள் காத்திருப்பு வீண் போகவில்லை!Representative Image.

ஈரோட்டுக் காரர்களின் 20 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வரை போற்றி பதிவிட்டு வருகின்றனர் ஈரோட்டை பூர்வீகமாகக் கொண்ட நெட்டிசன்கள். அட அப்படி என்ன செய்திருக்கிறார் என தேடிப் பார்ப்பவர்களுக்காகவே இந்த கட்டுரை. 

ஈரோட்டில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கோரிக்கை இருந்து வருகிறது. அதாவது சிக்கையா நாயக்கர் கல்லூரியை அரசு ஏற்று நடத்தவேண்டும் என்பதே அது. இந்த கல்லூரிதான் இப்பகுதியில் வசிக்கும் ஏழை மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைக்கும் கல்விக் களஞ்சியமாக திகழ்ந்து வருகிறது. சிக்கய்ய நாயக்கர் மகாஜன கல்லூரி என்று பெயரிடப்பட்ட இந்த கல்லூரிக்கு பெரும்பாலும் இப்பகுதியைச் சேர்ந்த ஏழை, நடுத்தரக் குடும்பத்து மாணவர்கள் சென்று பயின்று பயன்பெற்று வந்துள்ளனர். 

இந்நிலையில்தான் இந்த கல்லூரியை நடத்துவதற்கு சிரமம் ஏற்பட்டு வரும்நிலையில், கல்லூரியை நடத்துவதற்கான உரிமத்தையும் புதுப்பிக்கத் தவறியது உள்ளிட்ட காரணங்களால் 2002ம் ஆண்டு முதல் தனியார் ஒழுங்காற்று சட்டத்துக்குட்பட்டு,  கல்வி இயக்குநரின் கட்டுப்பாட்டில் வந்தது. 

கல்லூரியில் 11 இளங்கலை படிப்புகளும், 3 முதுகலைப் படிப்புகளும் இருக்கின்றன.  ஒவ்வொரு ஆண்டும் 500 முதல் 1000 வரை மாணவ-மாணவியர்கள் சேர்ந்து படித்து வருகின்றனர். இந்த கல்லூரியைத் தற்போது அரசு ஏற்று நடத்துவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்