தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு மீன்வள சார்நிலைப் பணியில் அடங்கிய மீன்துறை சார் ஆய்வாளர் பதவிக்கான காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத் தொகை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட பல்வேறு விவரங்களைப் பற்றி இதில் காண்போம்.
இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
முக்கிய விவரங்கள்
நிறுவனத்தின் பெயர் |
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் |
பணியின் பெயர் |
மீன்துறை சார் ஆய்வாளர் பதவி (Sub-Inspector of Fisheries) |
காலிப்பணியிடங்கள் |
24 |
விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள் |
அக்டோபர் 13, 2022 |
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி |
நவம்பர் 11, 2022 |
விண்ணப்பிக்கும் முறை |
ஆன்லைன் |
பணி விவரம்
கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறை |
காலிப்பணியிடங்கள் |
மீன்துறை சார் ஆய்வாளர் பணி |
24 |
ஊதியத்தொகை
இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
துறை |
ஊதியத்தொகை / மாதம் |
மீன்துறை சார் ஆய்வாளர் பணி |
மாதம் ரூ.35,900 முதல் ரூ.1,13,500 வரை (நிலை - 13) |
கல்வித்தகுதி
இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், பல்கலைக்கழக மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் கீழே குறிப்பிட்டுள்ள கல்வித் தகுதி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியினைப் பெற்றிருத்தல் வேண்டும்.
துறை |
கல்வித்தகுதி |
மீன்துறை சார் ஆய்வாளர் பணி |
(i) Must possess a diploma in Fisheries Technology and Navigation awarded by the State Board of Technical Education and Training, Tamil Nadu. (or) (ii) Must possess a Science Degree with Zoology as main subject. (or) (iii) Must possess a Degree of Bachelor of Fisheries Science. |
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் ஜூலை 01, 2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு |
வயது வரம்பு |
ஆ.தி., ஆ.தி(அ), ப.ப., மி.பி.வ/சீ.ம., பி.வ., பி.வ.(மு) மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் |
வயது வரம்பு இல்லை |
இதர பிரிவினர் |
32 வயதினை பூர்த்தி அடைந்தவராக இருக்க கூடாது. |
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பதாரர்கள், கணினி அடிப்படையிலான தேர்வு வைக்கப்படும். பிறகு, தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
பின், அதில் மேலே கூறப்பட்ட பதவிக்கான அறிவிப்பைத் தேடவும்.
அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளைப் பயன்படுத்தி, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.
மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…