Sat ,Dec 02, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

மத்திய அரசுத் தேர்வில் பாஸ் ஆக வேண்டுமா.? இலவச பயிற்சி வகுப்புகள் இதோ…!

Gowthami Subramani September 30, 2022 & 15:20 [IST]
மத்திய அரசுத் தேர்வில் பாஸ் ஆக வேண்டுமா.? இலவச பயிற்சி வகுப்புகள் இதோ…! Representative Image.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடும் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் குறித்த விவரங்களைப் பற்றி இதில் காண்போம்.

மாணவர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்புகளை முறையாகப் பயன்படுத்தி, மத்திய அரசு தேர்வில் வெற்றி பெற ஒரு சிறந்த வாய்ப்பாக இது அமைகிறது.

மத்திய அரசுத் தேர்வில் பாஸ் ஆக வேண்டுமா.? இலவச பயிற்சி வகுப்புகள் இதோ…! Representative Image

மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், சில காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன் படி, இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் திட்டமிட்டுள்ளது. இது குறித்த விவரங்களைப் பற்றி இதில் காண்போம்.

மத்திய அரசுத் தேர்வில் பாஸ் ஆக வேண்டுமா.? இலவச பயிற்சி வகுப்புகள் இதோ…! Representative Image

அரசுப் பணி தேர்வு

போட்டித் தேர்வுக்கான இலவச வகுப்புப் பயிற்சியில் கலந்து கொண்டு பெரும்பாலான மாணவர்கள் தேர்ச்சி பெற்று, அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர். அதே போல, இந்த முறை மத்திய அரசு அறிவித்த 20,000-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசுத் தேர்வில் பாஸ் ஆக வேண்டுமா.? இலவச பயிற்சி வகுப்புகள் இதோ…! Representative Image

தேர்வுக்கான கல்வித்தகுதி

மத்திய அரசு வெளியிட்ட இந்த தேர்வில் கலந்து கொள்ள மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

அதன் படி, https://ssc/nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசுத் தேர்வில் பாஸ் ஆக வேண்டுமா.? இலவச பயிற்சி வகுப்புகள் இதோ…! Representative Image

இலவச பயிற்சி வகுப்பு

மத்திய அரசு வெளியிட்ட இந்த தேர்விற்கு, விண்ணப்பித்த பட்டதாரிகள் விஹ்ழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வரும் அக்டோபர் 08, 2022 ஆம் நாள் முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்தப் போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

இந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடைய விரும்புபவர்கள், தேர்வுக்கு விண்ணப்பித்த்ட நபர்கள் அக்டோபர் 07, 2022 ஆம் தேதிக்குள், விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும், இந்த பயிற்சி வகுப்புகள் குறித்த கூடுதல் விவரங்கள் பற்றி தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி எண்: 94990 55906

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டப்படிப்பு முடித்தவர்கள், இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்