Fri ,Dec 08, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

IBPS Recruitment 2022 Notification: IBPS-ல் மாஸான வேலைவாய்ப்பு…! அதுவும் சூப்பரான சம்பளத்துல…! உடனே அப்ளை பண்ணுங்க.

Gowthami Subramani June 08, 2022 & 12:40 [IST]
IBPS Recruitment 2022 Notification: IBPS-ல் மாஸான வேலைவாய்ப்பு…! அதுவும் சூப்பரான சம்பளத்துல…! உடனே அப்ளை பண்ணுங்க.Representative Image.

IBPS Recruitment 2022 Notification: இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்க் பெர்சனல் செலக்ஷனில், 2022 ஆம் ஆண்டின் 8000-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களைக் கொண்டு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன் படி, விண்ணப்பதாரர்களுக்குத் தேவையான கல்வித் தகுதி, ஊதியத் தொகை, விண்ணப்பிக்கும் முறை போன்ற அனைத்து விவரங்களும் இந்தப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன (IBPS Recruitment 2022).

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் 

பணியின் பெயர்

Group “A”- ஆஃபீசர்ஸ் (ஸ்கேல்-I, II & III)

Group “B”- அலுவலக உதவியாளர் (Multipurpose)

காலிப்பணியிடங்கள்

8,106

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூன் 27, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (IBPS Recruitment 2022-23).

துறை

காலிப்பணியிடங்கள் (IBPS Job Vacancies)

IBPS RRB அலுவலக உதவியாளர்

4483

IBPS RRB அதிகாரி ஸ்கேல் I 

2676

IBPS RRB அதிகாரி ஸ்கேல் II

842

IBPS RRB அதிகாரி ஸ்கேல் III

80

மொத்தம்

8,106


Representative Image. ஜிப்மரில் அருமையான வேலை ரெடி…! உடனே அப்ளை பண்ணுங்க.


ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் அவர்களின் Scale அளவீட்டின் படி ஊதியத்தொகை வழங்கப்படும் (RBI IBPS Recruitment 2022).

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித்தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் (IBPS Job Eligibility).

துறை

கல்வித்தகுதி

IBPS RRB அலுவலக உதவியாளர்

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப்பட்டம்  அல்லது RRB-ன் பரிந்துரைப்படி, உள்ளூர் மொழியில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கணினி அறிவு பெற்றவராக இருக்க வேண்டும்

IBPS RRB அதிகாரி ஸ்கேல் I 

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு இணையான தோட்டக்கலை, கல்வி, வேளாண்மை, வனவியல், போன்றவற்றில் பட்டம் பெற்ற நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், உள்ளூர் மொழியில் புலமை வாய்ந்தவராகவும், கணினியில் பணிபுரியும் அறிவைப் பெற்றிருப்பவராகவும் இருக்க வேண்டும் (IBPS Bank Recruitment 2022)

IBPS RRB அதிகாரி ஸ்கேல் II

ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், ஏதேனும் ஒரு துறையில், இளங்கலைப் பட்டம் பெற்று அத்துடன் குறைந்தது 50% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். மேலும், பணி தொடர்பான துறையில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்பது அவசியம்

IBPS RRB அதிகாரி ஸ்கேல் III

விண்ணப்பதாரர்கள், ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும், குறைந்தது 50 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும்

 

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் வயது வரம்பைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

அலுவலக உதவியாளர்

குறைந்தபட்சம் 18 வயது முதல் 28 வயது வரை

அதிகாரி ஸ்கேல் I 

குறைந்தபட்சம் 18 வயது முதல் 30 வயது வரை

அதிகாரி ஸ்கேல் II

குறைந்தபட்சம் 21 வயது முதல் 32 வயது வரை

அதிகாரி ஸ்கேல் III

குறைந்தபட்சம் 21 வயது முதல் 40 வயது வரை

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள், கீழ்க்கண்ட முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • முதற்கட்ட தேர்வு (Objective Type Exam)
  • முதன்மைத் தேர்வு (Objective Type Exam)
  • நேர்காணல்

நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் வணிகத் தேவைகளின் படி, நிரப்பப்பட வேண்டிய காலியிடங்களைப் பொறுத்து, பதவிக்கு நிர்ணயிக்கப்படுவர் (IBPS Recruitment 2022-23).

விண்ணப்பக் கட்டணம்

மேற்கூறிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்கள் ரூ. 850 -ஐ விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும்.

SC/ST/PWBD போன்ற பிரிவுகளில் உள்ள நபர்கள் ரூ. 175 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (IBPS Job Recruitment Apply Online).

  • விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • பின் அதன் முகப்புப் பக்கத்தில், CRP RRBs-XI பதவிக்கான அறிவிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அதில் நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து அதில் பதிவு செய்ய வேண்டும்.
  • விண்ணப்பப் படிவத்தை சரியாக நிரப்ப வேண்டும். அத்துடன் தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும் (IBPS Job Application).
  • அதன் பிறகு, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் எதிர்காலப் பயன்பாட்டிற்காக, விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும் (IBPS Recruitment Notification 2022).

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்