குடியரசு தினம் என்றாலே, குடியரசு தின அணிவகுப்புகள் ஆரவாரமாக நடைபெறும். இதனைக் காணும் போது நம்மை மெய் சிலிர்க்க வைக்கும் எண்ணங்களுடன், வீரர்கள் அணிவகுப்பை நடத்துவர். குடியரசு தினத்திற்கு அணிவகுப்பு ஏன் முக்கியம் என்பதையும், குடியரசு தின விழா அணி வகுப்பு குறித்த சுவாரஸ்யமானத் தகவல்களையும் பற்றி இதில் காணலாம்.
நம் நாடு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் சுதந்திரம் அடைந்தது. இந்தியர்களின் தொடர் போராட்டங்கள் விளைவாக, இந்தியாவை விட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறினர். ஆனால், அப்போது நமக்குக் கிடைத்த சுதந்திரம் முழுமையானது அல்ல. சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. இதனால், ஆங்கிலேயர் சார்பில் கவர்னர் ஜெனரல் தான் நாட்டின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகே, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் நாள் இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பிறகு 1950 ஜனவரி 26 அன்றே இது நடைமுறைக்கு வந்தது. இதனால், ஆண்டுதோறும் ஜனவரி 26 அன்று குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்வாறு நாடு முழுவதும் கொண்டாடப்படும் குடியரசு தினத்தைப் பெரும் வகையில் கொண்டாடுவதற்கு, டெல்லியில் அணிவகுப்பு நடத்தப்படும். குடியரசு தின அணிவகுப்பு என்பது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த கண்கவர் அணிவகுப்பில், பல்வேறு மாநில அரசுகள் அந்தந்த மாநிலங்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டினைப் பறைசாற்றும் விதமாக, கண்கவர் வாகனங்கள் இடம்பிடிக்கும். இது காண்போரை மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் அமையும். அந்த வகையில் குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெறும் அலங்கார ஊர்திகள் அனைவரின் கண்களுக்கும் விருந்தளிக்கும் வண்ணம் அமையும்.
✤ ஆண்டுதோறும் குடியரசு தின அணிவகுப்பு ராஜ்பாத்தில் நடைபெறும். ஆனால், குடியரசு தினம் முதலில் கொண்டாடப்பட்ட நான்கு வருடங்கள் அதாவது, 1950, 1951, 1952, 1953 ஆகியவற்றில் இர்வின் ஸ்டேடியம், கிங்ஸ்வே, செங்கோட்டை, ராம்லீலா மைதானம் போன்றவை முறையே ஊர்வலங்கள் நடைபெற்றது.
✤ அதன் பிறகு, நிரந்தமரமாக அணிவகுப்பு நடைபெறும் இடமாக ராஜ்பாத்தைத் தேர்வு செய்தனர். இது தேர்வு செய்யப்பட்ட நேரத்தில் ராஜ்பாத்தை கிங்ஸ்வே என அழைக்கப்பட்டது.
✤ ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் இந்த குடியரசு தின அணிவகுப்பில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த பிரதமர், ஜனாதிபதிகள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பர். அதன் படி, முதன் முதலில் இந்திய குடியரசு அணிவகுப்பில் 1950 ஆம் ஆண்டு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றவர் இந்தோனேசிய அதிபராக இருந்த டாக்டர் சுகார்னோ ஆவார்.
✤ மேலும், ராஜ்பாத்தில் முதலில் கலந்து கொண்டவர் பாகிஸ்தான் நாட்டின் கவர்னரான மாலிக் குலாம் மொஹமது ஆவார்.
✤ இந்த விழா தொடங்கும் முன்பு, அதாவது ஜனாதிபதி விழா நடைபெறக்கூடிய இடத்திற்கு வந்த பின் தேசிய கீதம் ஒலிக்கும். பின், பாதுகாப்புப் பணியில் உள்ளவர்கள் தேசிய கொடியை வணங்குவார்கள். அப்போது 21 பீரங்கிகள் முழங்கும். அது உண்மையிலேயே 21 பீரங்கிகள் இல்லை. 25 பாண்டர்ஸ் என அழைக்கப்படக்கூடிய ராணுவத்தின் 7 பீரங்கிகள் ஆகும். இது மூன்று சுற்றுகளாக சுட்டபின்பு 21 என்ற கணக்காகும்.
✤ இவ்வாறு பீரங்கிகள் ஒரே நேரத்தில் 21 குண்டுகளையும் சுடாது. தேசிய கீதம் தொடங்கும் போது ஒரு முறை சுடுவார்கள். பிறகு 52 ஆவது நொடியில் கடைசி முறை சுடுவார்கள்.
✤ குடியரசு தின அணிவகுப்பில் பயன்படுத்தப்படும் இந்த பீரங்கிகள் இந்திய அரசால் நடத்தப்படும் அத்தனை விழாக்களிலும் பயன்படுத்தப்படும்.
இது போன்ற பல்வேறு நிகழ்வுகள், குடியரசுத் தினவிழா அணிவகுப்பில் செயல்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…