இந்திய ரயில்வே 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத் தொகை மற்றும் அதற்கான சில விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இதில், 3,115 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிபுகள் வெளியிட்டுள்ளது.
இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
முக்கிய விவரங்கள்
நிறுவனத்தின் பெயர் |
இந்திய ரயில்வே துறை |
பணியின் பெயர் |
எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், வெல்டர், வயர்மேன், பெயிண்டர், உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பிரிவு |
காலிப்பணியிடங்கள் |
3115 |
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி |
அக்டோபர் 29, 2022 |
விண்ணப்பிக்கும் முறை |
ஆன்லைன் |
பணி விவரம்
கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறை |
காலிப்பணியிடங்கள் |
எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், வெல்டர், வயர்மேன், பெயிண்டர், உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பிரிவு |
3,115 |
கல்வித்தகுதி
இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், 10 ஆம் வகுப்பில், 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், தொழிற்பயிற்சிக்கான தேசிய மற்றும் மாநில (என்.சி.வி.டி / எஸ்.சி.டி.வி) கவுன்சில்களில் இருந்து தொடர்புடைய வர்த்தகத்தில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 29, 2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.
துறை |
வயது வரம்பு |
எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், வெல்டர், வயர்மேன், பெயிண்டர், உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பிரிவு |
குறைந்தபட்ச வயது வரம்பு: 15 ஆண்டுகள் அதிகபட்ச வயது வரம்பு: 24 ஆண்டுகள் |
வயது தளர்வு
மேலும், இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின் படி தளர்வு அளிக்கப்படும்.
துறை |
வயது தளர்வு |
பழங்குடி வகுப்பினர் |
5 ஆண்டுகள் வரை வயது வரம்பு சலுகை |
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் |
மூன்றாம் ஆண்டு வரை வயது வரம்பு சலுகை |
மாற்றுத் திறனாளிகள் |
10 ஆண்டுகள் வயது சலுகை |
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.
முதலில் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் கண்டறிந்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளைக் காணவும்.
அதன் படி, விண்ணப்பதாரர்கள் அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதில் குறிப்பிட்ட படி, விண்ணப்பதாரர்கள் ரயில்வே ஆட்சேர்ப்பில் சேரலாம்.
மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…