2023 ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ மெயின் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நவம்பர் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி போன்றவற்றில் உள்ள படிப்புகளில் சேர்வதற்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வு ஜே.இ.இ தேர்வு ஆகும். இந்த தேர்வு 2 கட்டங்களாக, JEE Main, Advanced என பிரித்து நடத்தப்பட்டு மாணவர்கள் கல்வி பயில தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, ஒடிசா, தெலுங்கு, உருது, தமிழ், இந்தி, ஆங்கிலம், குஜராத்தில் போன்ற மொழிகளில் நடத்தப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து, பிற மொழித் தேர்வர்களுக்கு ஆங்கிலம் மொழியில் தேர்வு எழுதும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இந்த நுழைவுத் தேர்வு, என்.டி.ஏ அதாவது தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. 2022 ஆம் ஆண்டில், ஜேஇஇ தேர்வுக்கான முதல் அமர்வு ஜூன் 20 முதல் 29 ஆம் தேதி வரையும், இரண்டாவது அமர்வு ஜூலை 21 முதல் ஜூலை 30 ஆம் நாள் வரை நடைபெற்றது.
இந்த நிலையில், இந்த 2023 ஆம் ஆண்டிற்கான JEE Main 2023 தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நவம்பர் மாதம் 3 ஆவது வாரத்தில் தொடங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் இரண்டு கட்டமாக தேர்வுகள் நடைபெற உள்ளது. அதன் படி, இதன் முதல் அமர்வு ஜனவரி மாதத்திலும், இரண்டாவது அமர்வு ஏப்ரல் மாதத்திலும் நடைபெற உள்ளது.
இந்த இரண்டு Session தேர்வுகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள், தரவரிசைப் படி கல்லூரிகளில் சேரலாம்.
தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான முகவரி: https://jeemain.nta.nic.in/
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…