Sat ,Dec 09, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

Medical Field Courses List: 12 ஆம் வகுப்பிற்குப் பிறகு மருத்துவப் படிப்பு படிக்க போறீங்களா..! அப்ப இத கண்டிப்பா பாக்கணும்.

Gowthami Subramani June 15, 2022 & 15:45 [IST]
Medical Field Courses List: 12 ஆம் வகுப்பிற்குப் பிறகு மருத்துவப் படிப்பு படிக்க போறீங்களா..! அப்ப இத கண்டிப்பா பாக்கணும்.Representative Image.

Medical Field Courses List: மாணவர்கள் 12 ஆம் வகுப்பிற்குப் பிறகு, மருத்துவப் படிப்பில் சேர விருப்பம் கொண்டிருப்பர். ஆனால், அதனைப் பொறுத்தவர ஏகப்பட்ட துணைவுப் பிரிவுகள் உள்ளன. மருத்துவப் படிப்பில் சேர விருப்பம் உள்ள நபர்கள் இந்த துணைப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் கலந்து கொள்ளலாம் (Medical Field Courses List).

துணை மருத்துவப் படிப்பு

துணை மருத்துவப் படிப்பு என்பது, ஒரு முழுமையான செயல்முறையைக் கற்றுக் கொள்வதன் மூலம், தொழில்துறை சார்ந்த மருத்துவ உதவியைப் பெறுவதாகும்.

பொதுவாக துணை மருத்துவப் படிப்பில், சில பரிசோதனைகள் உள்ளடங்கும். இதில், எக்ஸ் கதிர்கள், எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன், அல்ட்ராசவுண்ட் போன்றவை அடங்கும்.

இவ்வாறு துணை மருத்துவப் படிப்புகளில் கலந்து கொள்ள நினைக்கும் நபர்கள் பல்வேறு பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மூலம் சிறந்த சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

12 ஆம் வகுப்பிற்குப் பிறகு

பள்ளிக்கல்வியை முடித்த பிறகு கல்லூரி வாழ்க்கைக்குச் செல்ல ஏராளமான கல்வி வாய்ப்புகளும், தொழில் வாய்ப்புகளும் உள்ளன.

மேலும், இந்த நிலை தான் அனைவருக்குமே மிக முக்கியமானதாக அமையும். அதன் படி, பாடத்திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதிலும் மிக முக்கிய கவனம் செலுத்துவது நல்லது. ஏனெனில், 12 ஆம் வகுப்பிற்குப் பிறகு, தொழில் மற்றும் உயர்கல்வி படிப்புகளுக்குத் தேர்ந்தெடுப்பதை முக்கியமாகக் கருத வேண்டும். இவ்வாறு தேர்ந்தெடுப்பதே வாழ்க்கை முழுவதும் உங்களுக்குப் பயன்படுபவையாக உள்ளன.

இதில், மருத்துவப் படிப்பு தேர்ந்தெடுக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு முக்கியமான பதிவாக இருக்கும். இந்தப் பதிவில், துணை மருத்துவப் படிப்புகளுக்கான விவரங்களைப் பற்றி காணலாம்.

பாராமெடிக்கல் படிப்புகள்

ஒரு கல்லூரிக்கும் மற்றொரு கல்லூரிக்கும் பாராமெடிக்கல் படிப்புகளுக்கான தகுதி மாறுபடும். அதாவது இது பாடத்தின் தன்மையைப் பொறுத்ததாக அமையும்.

துணை மருத்துவப் பணியாளர்கள் செயல்பாடு

துணை மருத்துவ ஊழியர்களில் செயற்கை மற்றும் எலும்பியல் தொழில்நுட்ப வல்லுநர்கள், பிசியோதெரபிஸ்டுகள் மற்றும் கதிரியக்க சிகிச்சை நிபுணர்கள் போன்றோர் உள்ளனர்.

துணை மருத்துவர்கள் மனித உடலில் ஏற்படும் நோய்களைக் கண்டறியும் பயிற்சியினைப் பெறுவர். இவர்கள் பல்வேறு வகையான மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள் வழியாக சிறந்த சிகிச்சையை வழங்கலாம்.

இந்தியாவில் உள்ள துணை மருத்துவப் படிப்புகள்

இந்தியாவில் மூன்று வகையான மருத்துவ படிப்புகள் உள்ளன (Medical Courses Name List).

  • இளங்கலைப் பட்டப்படிப்பு
  • டிப்ளமோ படிப்பு
  • சான்றிதழ் படிப்பு

இளங்கலை பட்டப்பிரிவில் உள்ள துணை மருத்துவப் படிப்புகள்

  • தொழிற்சிகிச்சையில் இளங்கலைப் படிப்பு
  • பிசியோதெரபி இளங்கலை
  • எஸ்சி. எக்ஸ்-ரே தொழில்நுட்பத்தில் இளங்கலை
  • எஸ்சி. டயாலிசிஸ் தொழில்நுட்பத்தில் இளங்கலை
  • எஸ்சி. மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம் (MLT)
  • எஸ்சி. ரேடியோகிராஃபி இளங்கலை
  • BASLP
  • எஸ்சி. கண் மருத்துவத்தில்
  • எஸ்சி. ஆடியோலஜி மற்றும் பேச்சு சிகிச்சை
  • எஸ்சி. ஆப்டோமெட்ரி
  • எஸ்சி. மயக்க மருந்து தொழில்நுட்பத்தில்

இந்த படிப்புகள் அனைத்தும், பொதுவாக 3 ஆண்டுகள் ஆகும். சில கல்வித் திட்டங்கள் 4 ஆண்டுகளாக இருக்கும் (கோட்பாடு மற்றும் நடைமுறை பயிற்சி).

டிப்ளமோ படிப்பில் உள்ள துணை மருத்துவப் படிப்புகள்

  • பிசியோதெரபி டிப்ளமோ
  • மருத்துவ இமேஜிங் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ
  • மருத்துவ பதிவு தொழில்நுட்பத்தில் டிப்ளமோ
  • டிப்ளமோ இன் தொழில் சிகிச்சை
  • DOTT (டிப்ளமோ இன் ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி)
  • ஏஎன்எம்
  • ஜிஎன்எம்
  • எக்ஸ்ரே தொழில்நுட்பத்தில் டிப்ளமோ
  • ரேடியோகிராஃபியில் டிப்ளமோ
  • டிப்ளமோ இன் டென்டல் ஹைஜீனிஸ்ட்
  • கிராமப்புறத்தில் டிப்ளமோ உடல்நலம்
  • DHLS (டிப்ளமோ இன் செவிங் லாங்குவேஜ் மற்றும் ஸ்பீச்)
  • டிஎம்எல்டி (மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளமோ)
  • டிப்ளமோ இன் ஆப்தால்மிக் டெக்னாலஜி
  • டிப்ளமோ இன் அனஸ்தீசியா டெக்னாலஜி
  • சமூக சுகாதாரப் பராமரிப்பில் டிப்ளமோ
  • டயாலிசிஸ் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ
  • டிப்ளமோ இன் நர்சிங் கேர் அசிஸ்டென்ட்

இந்தப் படிப்புகள் அனைத்தும், 1-3 வரையிலான ஆண்டுகள் வரை மாணவர்கள் பயிலலாம்.

சிறந்த சான்றிதழ்களுக்கான துணை மருத்துவ படிப்புகள்

  • எக்ஸ்ரே டெக்னீஷியன் சான்றிதழ்
  • கிராமப்புற சுகாதாரப் பராமரிப்புக்கான சான்றிதழ்
  • எச்.ஐ.வி மற்றும் குடும்பக் கல்விக்கான சான்றிதழ்
  • நர்சிங் பராமரிப்பு உதவியாளர் சான்றிதழ்
  • ECG மற்றும் CT ஸ்கேன் டெக்னீஷியன் சான்றிதழ்
  • டயாலிசிஸ் டெக்னீஷியன் சான்றிதழ்
  • ஆய்வக உதவியாளர்/தொழில்நுட்பத்திற்கான சான்றிதழ்
  • ஊட்டச்சத்து மற்றும் குழந்தை பராமரிப்புக்கான சான்றிதழ்
  • பல் மருத்துவ உதவியாளர் சான்றிதழ்
  • செயல்பாட்டில் சான்றிதழ் நாடக உதவியாளர்
  • வீட்டு அடிப்படையிலான சுகாதாரப் பராமரிப்பில் சான்றிதழ்

இந்தப் படிப்புகள் 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை நீடிக்கலாம். இந்தப் படிப்புகளைத் தொடர்வதற்குக் குறைந்தபட்ச தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இளங்கலைக் கல்வி திட்டத்தை முடித்த பிறகு முதுகலைப் பட்டப்படிப்புல் உள்ள பாராமெடிக்கல் படிப்பைத் தொடரலாம் (Medical Education Courses List).

இது போன்ற துணை மருத்துவப் படிப்புகளுகளைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு, அவர்களின் தகுதி மற்றும் திறமையைப் பொறுத்து ஊதியத் தொகை வழங்கப்படும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்