அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் நடத்தப்படும் பொறியியல் பாடப்பிரிவுகளின் மாணவர் சேர்க்கைக்கான மொத்த இடங்களின் எண்ணிக்கை 40ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் மற்றும் பல்வேறு துறைகளின் இயக்குனர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழகத்தின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அரசு பணிகளில் தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் காரணமாக, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தற்போது இரண்டு பாடப்பிரிவுகள் தமிழ் வழியில் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுவரை 40 இடங்கள் மாணவர் சேர்க்கைக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பாடப்பிரிவுகளையும் தமிழ் வழியில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதுவரை, 70 பாடப்பிரிவுக்கான புத்தகங்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மீண்டும் 23ஆம் தேதி இது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்படும், என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…