இந்தியாவின் இரும்பு மனிதர் என்று மக்களால் போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேல் தனது சிறு வயத்தில் இருந்தே நேர்மை மற்றும் மனதைரியத்துடன் வாழ்ந்து வந்தார். தன்னுடைய குடும்பம், அரசியல், மக்கள் என்று அனைத்திலும் நாட்டம் செலுத்தி தன்னுடைய கடமையை செய்தார். இவரின் பிறப்பு முதல் இறப்பு வரை மொத்த வரலாற்றையும் இந்த பதிவில் பாப்போம்.
குஜராத் மாநிலம் பேட்லாத் மாவட்டத்தில் கரம்சத் என்று ஊரை சேர்ந்தவர்கள் ஜாவேரிபாய் மற்றும் லாத்பாயி. இவர்களுக்கு 30.10.1875 மகனாகப் பிறந்தவர் தான் படேல். இவர்களுக்கு படேலுடன் சேர்ந்து மொத்தம் ஆறு பிள்ளைகள். சோமாபாய், நரசிம்மபாய் படேல், விட்டல் பாய் படேல், தம்பி காசிபாய், தங்கை டாசிபாய் ஆகியவர்கள் வல்லபாய் படேலுடன் பிறந்தவர்கள். தன்னுடைய தொடக்கப் பள்ளி பருவத்தை சொந்த ஊரில் மேற்கொண்டார். பள்ளி நேரம் முடிந்த பிறகு தந்தைக்கு விவசாய உதவி புரிந்து வாழ ஆரம்பித்தார்.
இவர் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போதே யார் தவறு செய்தாலும் அதனை தட்டிக் கேட்க ஆரம்பித்தவராம். இதற்கு ஒரு உதாரணமாக நம்மை பிரம்மிக்க வைக்கும் சம்பவத்தைப் பற்றி பாப்போம். படேல் அவர்களின் வகுப்பு ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை தானே வாங்கி விற்றுக் கொண்டிருந்தார். மேலும் மாணவர்களை வெளியில் எங்கேயும் நோட்டு புத்தகங்களை வாங்க கூடாது என்று மிரட்டியுள்ளார். இதனை கண்டு கோபத்தின் உச்சத்திற்கு சென்ற படேல் மாணவர்களை திரட்டி "ஆசிரியர் ஒழிக" என்று போராட ஆரம்பித்தார். பிறகு பள்ளி முதல்வர் என்ன நடந்தது என்று விசாரித்து அந்த பிரச்சனையை தீர்த்து வைத்தார். பார்த்தீர்களா அவர் அப்போவே எப்படி இருந்திருக்கிறார் என்று.
தன்னுடைய படிப்பை முடிந்த படேல் தன்னுடைய அண்ணனைப் போன்று மூன்றாண்டு வழக்கறிஞர் படிப்பை படிக்க விரும்பினார். இவர் மிகவும் திறமைசாளி என்பதால் படித்து முடித்த உடனே அண்ணனுடன் சேர்ந்து தொழில் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் தனியாக தொழில் செய்ய ஆரம்பித்தார். மிகவும் நேர்மையாக தனது வேலையை செய்யும் இவர், தவறான வழக்குகளை எவ்ளோ பணம் கொடுத்தாலும் எடுக்கவே மாட்டாராம்.
உயர் கல்வியை முடித்த படேலுக்கு கரம்சந்த் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அப்போது படேல் அவர்களுக்கு 18 வயதும், அவரின் மனைவிக்கு 12 வயதுமே ஆகியுள்ளது. அவர் வழக்கறிஞர் தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றும் அளவிற்கு சம்பாதித்து வாழ்ந்து வந்தார். அப்படி இருக்கையில் திடீரென "பிளேக்" நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் தன்னுடைய மனைவிக்கு எந்த பாதிப்பும் வந்து விட கூடாது என்று எண்ணி அவரை தன்னுடைய சொந்த ஊருக்கு அனுப்பி விட்டார் படேல். பின்பு தனியாக அந்த கொடிய நோயை எதிர் போராடி மீண்டு வந்தார்.
பிறகு நீதிமன்றத்தில் பெரிய வழக்குகளை எடுத்து வாதாட விரும்பினார் படேல். எனவே, இங்கிலாந்து சென்று படிக்க ஏற்பாடுகளை செய்தார். அந்த காலத்தில் ‘தாமஸ்குக்’ என்ற ஆங்கிலேயே கம்பெனி திறமைசாலிகளை தேர்ந்தெடுத்து அவர்களை படிக்க வைத்து தங்கள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துக்கொண்டனர். அந்த நிறுவனத்திற்கு தன்னுடைய விண்ணப்பத்தை அனுப்பி தேர்வு செய்யப்பட்டார் படேல். ஆனால் தன்னுடைய அண்ணன் அந்த படிப்பை படிக்க விரும்புமாரி சொல்லி தனக்கு அந்த வாய்ப்பை தருமாறு படேலிடன் கேட்டுக்கொண்டார். இவரும் அந்த வாய்ப்பை தன்னுடைய அண்ணனுக்கு விட்டுக்கொடுத்து விட்டார்.
பள்ளி பருவத்தில் இருக்கும் ஒரு நாள் காலில் புண் ஏற்பட்டு சீல் பிடித்த்தால் வலியால் துடித்தார். அப்போது நம் நாட்டில் நாட்டு மற்றும் மூலிகை மருத்துவம் என்பதால் இந்த நோய்க்கு இரும்பை நன்றாக காய்ச்சி புண் மீது வைத்தால் சரியாகிவிடும். சிறு பாலகனகாக இருக்கிறான் தாங்கிக்கொள்வானா என்று மருத்துவர் பெற்றோர்களிடம் கேட்டுள்ளார். உடனே படேல் அவர்கள் அந்த கரண்டியை அவரே வாங்கி புண் மீது சூடு வைத்துக்கொண்டு கத்தாமல் வழியை பொறுத்துக்கொண்டார்.
இவர் வழக்கறிஞராக பணியாற்றிக்கொண்டிருக்கும் போது அவரின் மனைவி கடுமையான வயிற்று வழியால் பாதிக்கப்பட்டார். அவரை மும்பை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தொழில் செய்ய வந்து விட்டார். இவர் வழக்கை வாதாடிக்கொண்டிருக்கும் போது தந்தியின் மூலம் மனைவி இறந்துவிட்டார் என்று தகவல் வந்தது, அப்போது கூட வழக்கை வாதாடி வென்று விட்டு தான் மனைவியை பார்க்க சென்றுள்ளார்.
நாடு விடுதலை ஆன பிறகு அனைத்து சமஸ்தானங்களையும் ஒன்று சேர்க்க முடிவெடுத்தனர். இருக்கும் 554 சமஸ்தானங்களில் ஜுனாகட், ஹைதராபாத், காஷ்மீர் மற்றும் தனி நாடாக இருக்க தங்களின் விருப்பத்தை தெரிவித்தனர். இது நாட்டின் முன்னேற்றத்தையும் நிம்மதியையும் சீர்குலைத்துவிடும் என்று இந்த பொறுப்பை படேல் அவர்களிடம் தந்தனர். அவர் தனி ஒரு ஆளாக அணைத்து சமஸ்தான்களையும் ஒன்று சேர்த்து புது இந்தியாவை உருவாகியுளளார்.
இவருக்கு இந்தியா விடுதலைக்காக போராட்டத்தில் ஈடுபடுவதில் பெரிதாக நாட்டம் செலுத்த வில்லை. இருப்பினும் மக்கள் காந்தி, நேரு அவர்களின் பேச்சு, செயலைப் பற்றி பெரிதாக பேசுவதைப் பற்றி அறிந்திருந்தார். எனவே, அகமதாபாத் சங்கக் கூட்டத்தில் மகாத்மா காந்தி பேசுவதை காண சென்றுள்ளார். வெள்ளையர்கள் நம் நாட்டில் வந்து செய்யும் அட்டூழியங்களைப் பற்றி உணர்ச்சி பொங்க பேசினார் காந்தி. பின்பு சிறிது காலம் கழித்து நம் நாட்டில் நடந்த மிகவும் கொடூரமான சம்பவம் தான் "ஜாலியன் வாலாபாக்" போராட்டம். அதனைக் கண்டதும் தன்னுடைய வழக்கறிஞர் பட்டத்தை தூக்கி எரிந்து விட்டு முழுநேரமும் நாட்டின் சூத்திரத்திற்காக தன்னை அர்பணித்துக்கொண்டார்.
அதன் பின்பு அவர் செய்த வெற்றிகரமான செயல்கள் ஏராளம். தன்னுடைய நாட்டின் வளர்ச்சி, மக்களின் பிரச்சனை என்று எல்லாவற்றிலும் இவர் எடுக்கும் முடிவுகள் மக்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. நாற்றிக்காக குரல் கொடுத்து பல முறை சிறைக்குச் சென்று பல சித்திரவதைகளை அனுபவித்து குடல் நோயால் பாதிக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் 15.12.1950 ஆம் ஆண்டு இயற்கையை எய்தினார். இவர் மறைந்தாலும் நாட்டிற்காக செய்த இவரின் வீரத்திலும், செயலிலும் இன்றும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பது தான் உண்மை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…