நம் நாட்டில் தெய்வத்திற்கு மேலாக கற்றுக்கொடுக்கும் குருவை நாம் மதிக்க முக்கிய பங்கினை அளித்தது டாக்டர். சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள் தான். நம்முடைய நாடு சுதந்திரம் அடைவதற்கு மறைமுகமாக பல சொற்பொழிவுகளை இளைஞர்களிடம் கூறியவர். பல பலகக்கலைக்கழகத்தில் தன்னுடைய பணியை செய்து மக்களுக்கு படிப்பின் முக்கியத்துவத்தை கொண்டு சென்றவர். மேலும் இவரின் பிறந்த தினத்தை "ஆசிரியர் தினமாக" இன்றுவரை கொண்டாடப்படும் டாக்டர். ராதாகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
திருத்தணியில் ஏழை தெலுங்கு நியோகி என்ற பிராமனப்பிரிவு குடும்பத்தை சேர்ந்தவர். 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள் சர்வபள்ளி வீராசாமி மற்றும் சீதம்மா தம்பதிக்கு மகனாக பிறந்தார் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். தன்னுடைய குழந்தைப் பருவத்தை திருத்தணி மற்றும் திருப்பதியில் வாழ்ந்தார். பின்னர் உயர்கல்விக்காக சென்னையில் குடிபெயர்த்தார். இவர் 16 வயதில் தனது உறவினரான சிவகாமுவை மணமுடித்தார். இவர்களுக்கு 5 பெண் குழந்தைகளும் சர்வபள்ளி கோபால் என்ற மகனும் உள்ளனர்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் தன்னுடைய கல்வியை உதவித்தொகை மூலம் தொடங்கினார். அப்படி ஆரம்பித்தது தான இவரின் கல்விக்கான தேடல், அங் உஆரம்பித்து எதுவரை அவரை கொண்டு சென்றது என்று பாருங்கள். தன்னுடைய ஆரம்பக்கல்வியை திருவள்ளூரிலுள்ள ‘கௌடி’ மற்றும் திருப்பதியிலுள்ள ‘லூத்தரன் மிஷன் உயர் பள்ளியிலும்’ படித்தார். பின்னர் உயர் கல்விக்காக வேலூரிலுள்ள ஊரிஸ் கல்லூரியில் சேர்ந்தார். ஏதேனும் காரணத்தால் சிறிது காலத்திற்கு பின் சென்னையிலுள்ள கிறிஸ்துவர் கல்லூரிக்கு மாறிவிட்டார். கல்லூரியில் முதன்மை பாடமாக தத்துவத்தை தேர்ந்தெடுத்த அவர் இளங்கலை (பி.ஏ) மற்றும் முதுகலைப் பட்டத்தையும் (எம்.ஏ) வென்றார்.
இவர் இந்து மதத்தின் இலக்கியத் தத்துவங்கள் - பகவத் கீதை, உபநிடதங்கள், பிரம்மசூத்ரா, சங்கரா, மாதவர் மற்றும் ராமானுஜர் ஆகியவர்களின் வர்ணனைகளை கரைத்துக் குடித்தவர். மேலும் இவர் ஜெயின் மற்றும் புத்தமத தத்துவங்களையும் கற்றவர். அது மட்டும் இல்லாது மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, பிராட்லி, காந்த், ப்லோடினஸ் மற்றும் பெர்க்சன் ஆகியோரின் தத்துவங்களையும் கற்றுத் தேர்ந்தவர். இவரிடம் இருக்கும் சிறப்பு என்னவெனில் தான் மட்டும் அதனை கற்று பயனடையாமல் நம் நாட்டில் அதனைப் பற்றிய சிந்தனைகளையும் அறிமுகப்படுத்தினார்.
இவரிடம் இருக்கும் மிக முக்கியமான சிறப்பு என்னவென்றால், மேலைய நாட்டிற்கு செல்லாமல் இந்தியாவிலையே தத்துவங்களைக் கற்றுத் தேர்ந்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இதனால் மற்ற நாடுகளில் நம் மண்ணின் பெருமையை கொண்டு சேர கருவியாக இருந்தவர். இந்துமதத் தத்துவம் குறித்து பேச ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் இவருக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன் மூலம் மேடையில் சொற்பொழிவை சுதந்திர போராட்டத்திற்கான சிறப்பு ஆயுதமாக பயன்படுத்தினார். மேலும் இந்திய தத்துவங்களை தரமான கல்வி வாசகங்களைக் கொண்டு மொழிபெயர்த்தால் மற்ற நாடுகளின் தரத்தை சுக்கு நுராக்கி விடும் என்று உணர்ந்தார். எனவே, 1923ல் பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைச்சிறந்தப் படைப்பாக “இந்திய தத்துவம்” என்னும் புத்தகம் வெளியிடப்பட்டது.
கல்வியை மூலதனமாகக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த டாக்டர். ராதாகிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய கல்லூரி படிப்பை முடிந்த பிறகு என்னென்ன பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் என்று பார்க்கலாம்.
1909ல் - சென்னை பிரசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராக பணியேற்றார்.
1918ல் - மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவ பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார்.
1921ல் - கல்கத்தா பல்கலைக்கழகத்தில், தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார்.
1931ல் - ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1939ல் - பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார்.
1946ல் - யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார்.
1948ல் - டாக்டர். ராதாகிருஷ்ணன் அவர்களை பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராக பதவி ஏற்குமாறு பலரும் கேட்டுக்கொண்டனர்.
1949ல் - சோவியத் யூனியன் தூதராக நியமிக்கப்பட்டார்.
1952ல் - இந்தியாவின் முதல் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1962ல் - நம் நாட்டின் கல்வி மற்றும் மேலைய நாடுகளுடன் வலுவான உறவை நீடிக்க வைத்த டாக்டர். ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்திய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவரின் திறமையான பணிக்காக 1954 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு உயரிய விருதான "பாரத ரத்னாவை" வழங்கியது. இரண்டு முறை துணைத் தலைவர்காக இருந்த இவர் 1962 ஆம் ஆண்டு நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மக்களுக்காக பல பாதுகாப்பு மற்றும் கல்வி சார்ந்த முடிவுகளை எடுத்துள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு 1967 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுப்பெற்று சென்னையில் குடிபெயர்த்தார். இவர் ஏப்ரல் 17, 1975 இல் தனது 85வது வயதில் காலமானார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…