Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

எஸ்பிஐ வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு வங்கி வேலை… ஆரம்ப ஊதியமே ரூ.36,000… மிஸ் பண்ணீடாதீங்க..

Gowthami Subramani November 02, 2022 & 11:40 [IST]
எஸ்பிஐ வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு வங்கி வேலை… ஆரம்ப ஊதியமே ரூ.36,000… மிஸ் பண்ணீடாதீங்க..Representative Image.

பொதுத்துறை வங்கியாக விளங்கும் எஸ்பிஐ வங்கி வட்டார அளவில் உள்ள அதிகாரி காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கித் தேர்வுகளில், இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேர்வாகக் கருதப்படுகிறது. எனவே, இதில் ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் விண்ணப்பித்து வேலைவாய்ப்பினைப் பெறலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா

பணியின் பெயர்

Circle Based Officer

காலிப்பணியிடங்கள்

1,422

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

அக்டோபர் 18, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

நவம்பர் 07, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Circle Based Officer

1,422

 

https://images.news18.com/tamil/uploads/2022/10/SBI-cicle.jpg

விண்ணப்பதாரர்கள், ஏதேனும் ஒரு வட்டாரத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வட்டாரங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Circle Based Officer

ஆரம்ப ஊதியமாக ரூ.36,000/-

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்களாக இருக்க வேண்டும்.

மேலும், செப்டம்பர் 30, 2022 தேதியின் படி, ஏதேனும் பட்டியலிடப்பட்ட வணிக வங்கியில் 2 ஆண்டுகள் பணி செய்து முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 30, 2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

Circle Based Officer

குறைந்தபட்ச வயது வரம்பு: 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 30 ஆண்டுகள்

 

வயது தளர்வு

மேலே கூறப்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, கீழ்க்கண்ட வகையில், வயது தளர்வு அளிக்கப்படுகிறது.

https://images.news18.com/tamil/uploads/2022/10/age-relaxation.jpg

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள், கீழ்க்கண்ட முறையில் தேர்வு செய்யப்படுவர்.

✤ ஆன்லைன் எழுத்துத் தேர்வு (Online Objective Test)

✤ ஆங்கிலத்திறனை சோதிக்கும் பேப்பர்/பேனா முறையான விரிவான எழுத்துத் தேர்வு (Descriptive Test)

✤ நேர்காணல் தேர்வு (Direct Interview)

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

✤ முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

✤ அதில் உள்ள Careers என்பதைக் க்ளிக் செய்தால் தனிப்பக்கம் ஒன்று திறக்கும்.

✤ அந்த பக்கத்தில் உள்ள லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

✤ பின், புதிதாக தோன்றும் பக்கத்தில் மேலே கூறப்பட்ட பதவிக்கான அறிவிப்பைப் பார்க்கவும்.

✤ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முறைகளைப் பயன்படுத்தி, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்