Sun ,Mar 03, 2024

சென்செக்ஸ் 73,806.15
60.80sensex(0.08%)
நிஃப்டி22,378.40
39.65sensex(0.18%)
USD
81.57
Exclusive

Scholarship for College Students in Tamilnadu 2022: கல்லூரி மாணவிகளுக்கு அரசு வழங்கும் மாதம் ரூ.1000 உதவித்தொகை…! எப்படி விண்ணப்பிப்பது..?

Gowthami Subramani June 27, 2022 & 16:30 [IST]
Scholarship for College Students in Tamilnadu 2022: கல்லூரி மாணவிகளுக்கு அரசு வழங்கும் மாதம் ரூ.1000 உதவித்தொகை…! எப்படி விண்ணப்பிப்பது..?Representative Image.

Scholarship for College Students in Tamilnadu 2022: தமிழக அரசு, அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வியில் சேரக்கூடிய கல்லூரி மாணவிகளுக்கு உதவும் வகையில் ரூ. 1000 வழங்குவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன் படி, இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் நபர்களின் தகுதி, எவ்வாறு பெறுவது உள்ளிட்ட விவரங்களை இந்த பதிவில் காணலாம் (Scholarship for College Students in Tamilnadu 2022).

நலத்திட்டங்கள்

மத்திய மற்றும் மாநில அரசுகள் பள்ளி மாணவர்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. கொரோனா காலத்திற்கு பிறகு, பள்ளி முடித்த மாணவர்கள் ஏராளமானோர் கல்லூரிக்குச் செல்ல முடியாமல் இடைநிற்றல் அதிகரித்துள்ளது (How to Get 1000 Rs for Higher Education Students). மேலும், இதை தடுத்து நிறுத்தும் விதமாக, மாணவிகள் மாதந்தோறும் ரூ.1,000 பெறுவதற்கான திட்டங்கள் வழிவகுக்கப்பட்டுள்ளன.

உதவித் தொகை பெறுவதற்கான தகுதி (How to Get Scholarship for Higher Education in Tamilnadu)

இத்திட்டத்தின் மூலம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உதவும் வகையில், அவர்கள் உயர் கல்வியில் சேருவதற்கு மாதம் ரூ.1,000 வரை உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது (Is There Any Scholarship for College Students). அதன் படி, ஒவ்வொரு ஆண்டுக்கும் 12 மாதம் என்ற கணக்கில் 12,000 ரூபாய் கிடைக்கும். இவ்வாறு, மூன்று ஆண்டுகள் படிக்கும் மாணவிகளுக்கு 36,000 ரூபாய் பெறுவர்.

இந்தத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான தகுதி குறித்து மாநில உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் படி, அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பில் சேரும் மாணவிகள் பயன் பெறலாம் (Government Scholarship for College Students 2022).

அதன் படி, அரசுப்பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள்மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை தொடரக் கூடிய மாணவர்கள் இதில் பயன் பெறுவர்.

ஒதுக்கப்பட்ட நிதி

இந்த சிறப்பான திட்டத்தின் மூலம், 6 லட்சம் மாணவிகள் பயன் பெறுவர் எனக் கூறப்படுகிறது. இந்த திட்டம் அரசு பள்ளிகளில் குறைந்து வரக்கூடிய மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் வழிவகுக்கிறது. மேலும், இந்த திட்டத்திற்கு தமிழக அரசு ரூ. 698 கோடி நிதி ஒதுக்கிட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன் பெற நினைப்பவர்கள், கீழே குறிப்பிடப்பட்ட முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம் (Higher Education Scholarship Schemes in Tamil 2022).

கல்லூரி உதவித்தொகை பெறுவது எப்படி? (Scholarship for College Students in Tamilnadu 2022 Apply Online)

தமிழ்நாடு அரசி இந்த உதவித் தொகை பெறும் மாணவிகள் கீழ்க்கண்டவாறு விண்ணப்பிக்க வேண்டும்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக, https://penkalvi.tn.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. தகுதி பெற்ற மாணவிகள் அவர்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும் (Tamilnadu Scholarship for College Students).

அதன் படி, இதற்காக இன்று முதல் வரும் 30 ஆம் வரை சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, உடனடியாக இணையதளத்தில் மாணவிகளின் விவரங்களைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதில் விண்ணப்பிக்க இளநிலைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவியர்களிடம் இருந்து சுய விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள், அரசு பள்ளிகளில் படித்ததற்கான விவரங்கள், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழின் நகல் ஆகியவற்றைத் தொகுத்து சமர்ப்பிக்க வேண்டும் (Tamilnadu Higher Education Scholarship 2022 Application Form).

மேலும், இவற்றை ஒவ்வொரு கல்லூரி துறை சார்ந்த தலைவர்கள் இணையதளத்தில் உள்ளிட்டு அனுப்ப வேண்டும். மேலும், இதற்கு மாணவிகளின் தொலைபேசி எண்ணிற்கு OTP அனுப்பப்படும் என்பதால், செல்போனை தவறாது கொண்டு வர வேண்டும். இதற்காகவே, மாணவிகளும் தாங்களாகவே பதிவேற்றம் செய்யலாம்.

குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள், மாணவிகள் சான்றிதழ்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்