New Guidelines for Schools: தமிழகத்தில் 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றுடன் கோடை விடுமுறை முடிவுக்கு வருகிறது. அதன்படி, நாளை ஜூன் 13 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அதேபோல், 11 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 27 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 20 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பள்ளிகளுக்கான மாதிரி வேலை நேரம் மற்றும் வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதாவது புதிய கல்வியாண்டில் 2022 - 23 பள்ளிகள் வேலை நேரம் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
"பள்ளிகள் இனி இப்படி தான் செயல்படனும்"
1. பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே உடற்கல்வி ஆசிரியர்கள் வருகைதந்து மாணவர்களின் சீருடை, ஒழுக்கம் ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும்.
2. மதிய உணவு இடைவேளை முடிந்த பின் 20 நிமிடம் நூலங்களில் சிறார் பருவ இதழ், நியூஸ் பேப்பர், நூல்களை வாசிக்க செய்ய வேண்டும்.
3. வாரம் ஒருநாள் நீதிபோதனை பாடவேளையில் மனநல ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
4. ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தபட வேண்டும். அதற்கு முன் பெற்றோர் கூட்டம் நடத்தி குழந்தைகள் கல்வி செயல்பாடு குறித்து அவர்களிடம் பேச வேண்டும்.
5. அதோடு 1 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு காலை 9.10 முதல் மாலை 4.10 மணி வரை வகுப்புகள் நடத்தலாம். இதேபோல், 11, 12 ஆம் வகுப்புகளுக்கு காலை 9 முதல் 4 வரை வகுப்புகள் நடத்தலாம். இதில் முதல் 30 நிமிடம் காலை வணக்கம் கூட்டத்துக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
6. இருப்பினும், பள்ளிகள் தங்களின் அமைவிடம் போக்குவரத்து வசதிகளை கருத்தில் கொண்டு வகுப்புகள் தொடங்கும் நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம். வழிமுறைகளை முறையாக பின்பற்றவும் செயல்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…