Sat ,Dec 02, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

சீறிப்பாயும் வேங்கை நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வரலாறு மற்றும் இறப்பின் மர்மம் | Subash Chandra Bose History in Tamil

Priyanka Hochumin Updated:
சீறிப்பாயும் வேங்கை நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வரலாறு மற்றும் இறப்பின் மர்மம்  | Subash Chandra Bose History in TamilRepresentative Image.

தன்னுடைய அசாத்தியமான துணிச்சலாலும், நாட்டிற்கு விடுதலைப் பெற்றுத் தர வேண்டும் என்ற ஆசையாலும் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்து நாட்டு மக்களுக்காக வாழ்ந்த மாபெரும் வீரர் தான் நேதாஜி என்று அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ். பிறப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்காலாம் ஆனால் நம்முடைய இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் நேதாஜி. இவரின் படிப்பு, தேசப்பற்று, போர் யுக்தி உள்ளிட்ட அனைத்து வரலாற்றையும் பற்றி தெரிந்துகொள்வோம்.

சீறிப்பாயும் வேங்கை நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வரலாறு மற்றும் இறப்பின் மர்மம்  | Subash Chandra Bose History in TamilRepresentative Image

மாவீரனின் பிறப்பு

ஒரிசா மாநிலத்தில் கட்டாக் பகுதியில் ஜானகிநாத் போஸ் மற்றும் பிரபாவதி தேவி தம்பதிக்கு ஜனவரி 23, 1897 அன்று மகனாக பிறந்தார் சுபாஷ் சந்திர போஸ். தன்னுடைய ஐந்தாம் வயதில் கட்டாக்கிலுள்ள பாப்டிஸ்ட் மிசன் ஆரம்பப் பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார். அதே பள்ளியில் ஏழு ஆண்டுகள் வரை தன்னுடைய படிப்பை தொடங்கினார். தன்னுடைய சிறு வயத்தில் இருந்து படிப்பில் சிறந்து விளங்கினார் போஸ்.

சீறிப்பாயும் வேங்கை நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வரலாறு மற்றும் இறப்பின் மர்மம்  | Subash Chandra Bose History in TamilRepresentative Image

கல்லூரி காலம்

அதற்கு பின்னர் தன்னுடைய உயர் கல்வியை கல்கத்தா பல்கலைக்கழகத்தில் தொடங்கினார். 1913 ஆம் ஆண்டு கல்கத்தா பல்கலைக்கழக தேர்வில் 2 ஆவது மாணவனாகத் தேர்ச்சி பெற்று தன்னுடைய பெற்றோருக்கு பெருமை தேடித் தந்தார். பின்னர் 1915 ஆம் ஆண்டு பிரசிடென்சி கல்லூரியில் படித்தார்,  ஆனால் அவரின் படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. காரணம், அங்கு பணியாற்றி வந்த கல்லூரி பேராசிரியர்  ஓட்டன் என்பவர், ஆங்கிலேயர் இனவெறி மிக்கவர். அவருக்கும் நேதாஜிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார்.

பின்பு 1917 ஆம் ஆண்டு சர்ச் கல்லூரியில் சேர்ந்து தன்னுடைய படிப்பை தொடர்ந்தார். ஒருவழியாக 1919 ஆம் ஆண்டு பி.ஏ இளங்கலைப்பட்டம் பெற்றார். இவரின் தேசப்பற்றையும், துணிச்சலையும் கண்டு பயந்த அவரின் தந்தை லண்டனில் சிவில் சர்வீஸ் தேர்வுக்காக படிக்க வைத்தார். அதிலையும் தேர்ச்சி பெற்று வேலையும் கிடைத்தது, ஆனால் அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. தன்னுடைய நாட்டை அடிமைப் படுத்திய வெள்ளையர்களுக்கு கீழ் வேலை செய்ய விரும்பாததால் இவர் அரசியலில் நுழைந்தார்.

சீறிப்பாயும் வேங்கை நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வரலாறு மற்றும் இறப்பின் மர்மம்  | Subash Chandra Bose History in TamilRepresentative Image

அரசியல் பயணம்

இந்திய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து சித்தரஞ்சன் தாஸின் வழிகாட்டுதலாலும், ஆதரவாலும் தன்னுடைய வேட்டையை தொண்டன்கிறானர் சுபாஷ் சந்திர போஸ். தன்னுடைய உரையால் நாட்டு மக்களுக்கு தேச உணர்வை தூண்டிய நேதாஜி, காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவராகவும், வங்காள மாகாணத்தில் காங்கிரஸ் செயலாளராகவும் பொறுப்பேற்றார். இவரின் போராட்ட முறையானது ஆங்கிலேயருக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. எனவே, அவர்கள் 1925-ல் நேதாஜியை மாண்டலேயில் சிறையில் அடைத்தனர்.

இவர் கைதான சமயத்தில் வங்கதேச சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இருப்பினும் சிறையில் இருந்தே சுபாஷ் சந்திர போஸ் வெற்றிப் பெற்றார். இந்த சம்பவம் வெள்ளையர்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. 1927 ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போஸ் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பதவி ஏற்றார்.

சீறிப்பாயும் வேங்கை நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வரலாறு மற்றும் இறப்பின் மர்மம்  | Subash Chandra Bose History in TamilRepresentative Image

கட்சி தலைவர் பதவி

நேதாஜியும் நேருவும் சேர்ந்து அரசியல் பணியை தொடங்கினர். பின்பு நேதாஜி இந்திய சுதந்திரத்திற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று உதவி கேட்க ஆரம்பித்தார். இவரின் செயல்கள் சிறிது காலத்தில் உலகம் முழுக்க பரவியது. எனவே, மக்களுக்கு இவர் பெருந்தலைவராக விளங்கினார். அதனால் இவரை கட்சி தலைவராக நிர்ணயிக்க பலரும் சிபாரிசு செய்ய ஆரம்பித்தனர். ஆனால் காந்தி வெள்ளையர்கள் மீது இவர் மேற்கொள்ளும் நடவடிக்கையை பார்த்து சிறிது தயக்கம் கொண்டார்.

இதற்கு பின்னர் காங்கிரஸ் கட்சிக்குள் பல கருது வேறுபாடுகள் ஏற்பட ஆரம்பித்தது. இதற்கெல்லாம் அடங்கி போக மாட்டேன் என்று போஸ் தன்னுடைய தனி அமைச்சரவையை உருவாக்கினார். காந்தி அவர்கள் சிபாரித்த சீதாராமையாவிற்கும், போஸ் அவர்களுக்கு வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் சுபாஷ் சந்திரா போஸ் அவர்கள் வெற்றிபெற்றார். இருப்பினும் கட்சியின் செயற்குழு மற்றும் நேதாஜிக்கு இடையில் அரசியல் சார்ந்த வாக்குவாதங்கள் நடந்ததால் அவர் அந்த பதவியில் நீடிக்க முடியவில்லை.

சீறிப்பாயும் வேங்கை நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வரலாறு மற்றும் இறப்பின் மர்மம்  | Subash Chandra Bose History in TamilRepresentative Image

உருவாக்கிய படை

பின்னர் அவர் தேச விடுதலைக்காக பல நாடுகளுக்கு சென்று இந்தியர்களை திரட்ட ஆரம்பித்தார். இந்திய ராணுவத்தில் இவர் செய்த செயல் பலரையும் ஈர்க்க வைத்தது. பெண்களுக்கு என்று ராணுவ அணியை உருவாக்கினார். பின்பு 1944 ஆம் ஆண்டு மக்களியை எழுச்சி பாதையில் கொண்டு செல்ல ஆரம்பித்தார். "உங்களின் ரத்தத்தை தாருங்கள் சுதந்திரத்தை தருகிறேன்" என்று இவர் கூறிய வார்த்தைகள் மக்களின் மனத்தில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்த தொடங்கியது.  

சீறிப்பாயும் வேங்கை நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வரலாறு மற்றும் இறப்பின் மர்மம்  | Subash Chandra Bose History in TamilRepresentative Image

வீர மரணம்

பர்மாவில் ஆங்கிலேயருக்கு எதிராக நடந்த போராட்டத்தின் விளைவாக இக்பால் பகுதியில் இந்திய கொடி ஏற்றப்பட்டது. இந்த செயல் உலகை திரும்பி பார்க்க வைத்தது. இருப்பினும் மற்ற நாடுகளின் அழுத்தத்தால் ஜப்பான் மற்றும் ஜெர்மனி ராணுவம் பர்மாவைத் தாக்க முடிவு செய்தனர். அப்போது இருக்கும் சூழலில் போரில் இருந்து பின்வாங்குவதைத் தவிர வேற வழி இல்லை நேதாஜிக்கு. இந்த சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே, ரஷ்யாவிடம் இருந்து உதவி கேட்க பயணம் மேற்கொள்ளும் போது வீரமரணம் அடைந்துவிட்டார் என்று வரலாறு கூறுகிறது.

இவர் ஜப்பான் படை விமானமான மிட்சுபிஷி கி -21 மூலம் பயணம் மேற்கொள்ளும்போது விபத்து ஏற்பட்டு உயிர்தப்பியதாகவும். அருகில் இருந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரழந்தாகவும் கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் அவரின் உடல் ஜப்பான் டோக்கியோவில் உள்ள ரென்கோஜி கோவிலில் புதைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் எது உண்மை என்று யாருக்கும் இதுவரை தெரியவில்லை.

சீறிப்பாயும் வேங்கை நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வரலாறு மற்றும் இறப்பின் மர்மம்  | Subash Chandra Bose History in TamilRepresentative Image

நேதாஜி பெயர் வர காரணம்

போராட்டத்தின் போது சிங்கப்பூர் சென்ற போஸ், மோகன் சிங் அவர்களால் நிர்வப்பட்ட “ராஷ் பிஹாரி போஸ்” என்னும் குழுவின் முழு அதிகாரமும் கொடுக்கப்பட்டது. இந்திய தேசிய இராணுவத்தால் (ஐ.என்.ஏ அசாத்து ஹிந்து ஃபாஜ்) "நேதாஜி" என்று அறியப்பட்டார். அப்போது முதல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

1992 ஆம் ஆண்டு இறந்தவர்களுக்கு இறந்தவர்களுக்குத் தரப்படும் ‘போஸ்துமஸ்’ வழக்கப்படி நேதாஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஆனால் இந்திய மக்கள் மற்றும் அவரின் குடும்பத்தினர் அவர் இறக்கவில்லை என்று உறுதியாக நம்பினர். அதனால் அந்த விருதை வாங்க மறுத்துவிட்டனர். இவரின் இறப்புக்கு பின்பு இருக்கும் மர்மானது இதுவரை புரியாத புதிராக இருந்து வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்