பி.டெக் மற்றும் எம்.டெக் முடித்தவர்களுக்கு நேரடியாக எந்தவித தேர்வும் இல்லாமல் அரசு பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் மீன்வள பொறியியல் கல்லூரி நாகப்பட்டினத்தில் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் காலியாக இருக்கும் சில காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
பணியின் விவரங்கள்:
உதவி பேராசிரியர் பணிக்கு எம்.டெக் (Fish Process Engineering/Aquacultural Engineering) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாத சம்பளம் நெட் தேர்ச்சி பெற்றிருந்தால் ரூ.40,000 ஆகவும், நெட் தேர்ச்சி பெறவில்லை என்றாலே ரூ.35,000 ஆகவும் வழங்கப்படும்.
ஆய்வுக்கூட நிபுணர் பணிக்கு பி.டெக் (Fish Engineering) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பணிக்கும் அதிகபட்ச வயது 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் [email protected] என்ற இமெயில் முகவரிக்கு தங்களுடைய ரெஸ்யூம் மற்றும் சான்றிதழ்களை 20.01.2023 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இதையடுத்து விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைன் மூலமே நேர்காணல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவர். இந்த பணி 6 மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நியமனம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பான மேலும் விபரங்களை பெற இங்கே கிளிக் செய்யவும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…