தமிழகத்தில் இந்தாண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. எப்போதும் மே மாதம் அக்னி நட்சத்திரம் முடிந்ததும் வழக்கமாக வெயில் சற்று குறையும். ஆனால், தற்போது அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் சற்று தாமதம் நீடித்து வருகிறது. எப்போதும் கோடை விடுமுறை முடிந்ததும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம். அதன்படி தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்புக்கு, ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்படும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால் வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் 7 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், வெயிலின் தாக்கம் இன்னும் குறையாத காரணத்தால் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளி வைப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று காலை ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி, 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 12ஆம் தேதியும், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை வரும் 14ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…