Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!

Gowthami Subramani October 28, 2022 & 16:00 [IST]
குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!Representative Image.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழக அரசின் கீழ் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும்.

அதன் படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது,

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கானத் தேர்வு- II/ IIA-க்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த மே மாதம் 21 ஆம் நாள் நடைபெற்றது.

இதற்கிடையே மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வழக்குகள் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. மேற்படி வழக்குகளில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கிய நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறுகட்ட கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மாண்புமிகு உயர்நீதிமன்றத்தின் ஆணைகளை செயல்படுத்துவது தொடர்பாக மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. அப்பணி நிறைவுற்ற பின்னர் மேற்படித் தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக செய்தி சமூக ஊடகங்களில் வெளிவரும் ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் எனவும், அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தினை  மட்டுமே அணுகுமாறும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளம்: www.tnpsc.gov.in


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்