Sat ,Dec 02, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

Teacher Vacancy 2022: 50,000 டீச்சர் பணியிடங்களா..? சீக்கிரம் விண்ணப்பியுங்க….

Gowthami Subramani June 14, 2022 & 13:15 [IST]
Teacher Vacancy 2022: 50,000 டீச்சர் பணியிடங்களா..? சீக்கிரம் விண்ணப்பியுங்க….Representative Image.

Teacher Vacancy 2022: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களின் விவரங்கள் குறித்து பாமக தலைவரான அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

போதுமான அளவு ஆசிரியர் இல்லை

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா சூழ்நிலையால் நேரடி வகுப்புகள் தடை செய்யப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு சிறிது இயல்புநிலைக்குத் திரும்பியவுடன், மீண்டும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன (Teacher Recruitment 2022).

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குத் தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதே சமயம் இந்த சூழ்நிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் மாணவர்களுக்கு, உயர்கல்விக்கு அடிப்படை கல்வி தொடக்கக் கல்வி ஆகும். இத்தகைய தொடக்கக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் இருப்பது பெரும் ஏமாற்றத்தை அளித்து வருகிறது (Upcoming Teacher Examination 2022).


Pension Schemes in Tamilnadu: தினமும் 7 ரூபாய் மட்டும் சேமித்து, 50,000-க்கும் அதிகமாக பென்சன் பெறலாம்…! இத மட்டும் பண்ணுங்க…. imagePension Schemes in Tamilnadu: தினமும் 7 ரூபாய் மட்டும் சேமித்து, 50,000-க்கும் அதிகமாக பென்சன் பெறலாம்…! இத மட்டும் பண்ணுங்க…..!


ஆசிரியர்கள் இல்லாமல் இத்தனை வகுப்புகளா..?

தமிழகத்தில், தொடக்கக் கல்வித் துறையின் கீழ், 22,831 தொடக்கப்பள்ளிகள், 6,587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், இதில் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 பேர் மட்டுமே. அந்த வகையில், ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என வைத்துக் கொண்டால் கூட ஆசிரியர்களின் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லை (Teacher Recruitment Apply Online).

அதன் படி, தொடக்கப்பள்ளியைப் பொறுத்த வரை, 1,14,155 வகுப்புகளும், நடுநிலை பள்ளிகளில் 52,696 வகுப்புகள் உள்ளன. இவ்வாறு மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கிறது. இப்படி இருக்கும் சமயத்தில், 1,66,851 வகுப்புகளுக்கு 69,640 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அதன் படி, இன்னும் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர் (Teacher Vacancy 2022).

கடைசியாக 2013-2014 ஆம் ஆண்டு நியமித்தது..?

தமிழ்நாட்டில், கடந்த 2013-14 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதன் காரணமாக, அரசால் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் 4,863 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன (Teachers Vacancy).

இதனையடுத்து, கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரக் கணக்கான ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அதன் படி, சுமார் 11 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற சூழ்நிலை உள்ளது. அவ்வாறு நியமித்தால் கூட அரசு அனுமதித்த பணியிடங்களை நிரப்ப முடியும். ஆனால், அனைத்து வகுப்புகளுக்குமே ஆசிரியர்கள் கிடைக்க மாட்டார்கள் (Teacher Qualification Exam).


Free Scooty for College Students: கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி…! எப்படி பெறுவது..? யார் யாரெல்லாம் பெறலாம்… முழு விவரங்கள் இங்கே….! imageFree Scooty for College Students: கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி…! எப்படி பெறுவது..? யார் யாரெல்லாம் பெறலாம்… முழு விவரங்கள் இங்கே….!.


தரமான கல்வி

அரசு பள்ளிகளில் நிர்ணயித்த அறிவிப்பின் படி, 40 மாணவர்களுக்கு மட்டுமே ஒரு ஆசிரியர் என்பது அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது. ஆனால், வகுப்புக்கு ஒரு ஆசிரியர் வேண்டும் என்பதையும் நிறைவேற்ற அரசு முயற்சி எடுப்பதில்லை (Teacher Jobs 2022).

அதன் படி, தற்போது மூன்று வகுப்புகளுக்கு ஓர் ஆசிரியர் மட்டுமே வைத்து அரசுப் பள்ளிகளில் கல்வி பயிலப்படுகிறது. இவ்வாறு இருந்தால், தரம் வாய்ந்த கல்வியை அளிப்பது மிகக் கடினமாக இருக்கும் (TET Exam 2022).

ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர்

கல்விக்கு நிதி அனுப்புவதால் மட்டும் பயன் இருக்காது. ஒரு வகுப்பு ஒரு ஆசிரியரையாது நியமிக்க வேண்டும். நடுநிலைப் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகளில் இத்திட்டத்தைக் கட்டாயம் கொண்டு வர வேண்டும். இது வரை நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும், விரைவில் நடைபெற இருக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அரசு வேலை வழங்குவதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறையினைத் தீர்க்க முடியும் (Teacher Jobs).

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்