Sun ,May 28, 2023

சென்செக்ஸ் 61,291.57
-140.17sensex(-0.23%)
நிஃப்டி18,070.15
-59.80sensex(-0.33%)
USD
81.57
Exclusive

பொறியில் பட்டபடிப்பிற்கான கவுன்செலிங் சேர்க்கை இன்று முதல் தொடக்கம் | TNEA Counselling 2023

Priyanka Hochumin Updated:
பொறியில் பட்டபடிப்பிற்கான கவுன்செலிங் சேர்க்கை இன்று முதல் தொடக்கம் | TNEA Counselling 2023 Representative Image.

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அல்லது விண்ணப்பதாரர்கள் இன்று முதல் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்த முழு விவரத்தையும் இந்த பதிவில் பாப்போம்.

தமிழகத்தில் மொத்தம் 440 பொறியில் கல்லூரிகள் உள்ளன. இதில் கவுன்சலிங் அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்வதற்காக 1.5 லட்சம் சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, தங்கள் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ளவும், குறைந்த செலவில் படிக்கவும் இந்த கவுன்சலிங் உங்களுக்கு உதவியாக இருக்கும். இன்று தொடங்கி வரும் ஜூன் 4, 2023 ஆம் தேதி வரை தாராளமாக விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.500/- வசூலிக்கப்படுகிறது. இதில் பட்டியல் இனமக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் பகுதியைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.250/- செலுத்த வேண்டும்.

பொறியில் படிப்பிற்கான கவுன்சிலிங் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கு இந்த https://www.tneaonline.org, https://www.tndte.gov.in அதிகாரபூர்வ இணையதளத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் மற்ற அனைத்து விவரமும் அதில் தெளிவாக அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி BE, B Tech பக்கவாட்டு நுழைவு [lateral entry] மற்றும் பகுதி நேர பட்டப்படிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்