Wed ,Dec 06, 2023

சென்செக்ஸ் 69,296.14
431.02sensex(0.63%)
நிஃப்டி20,855.10
168.30sensex(0.81%)
USD
81.57
Exclusive

பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் - எப்படி பதிவிறக்கம் செய்வது | TNEA Rank List 2023

Abhinesh A.R Updated:
பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் - எப்படி பதிவிறக்கம் செய்வது | TNEA Rank List 2023Representative Image.

தமிழ்நாட்டில் பொறியியல் பயில ஏதுவாக கலந்தாய்வு நடத்தப்படும். அந்தவகையில், 2023 - 2024ஆம் ஆண்டு கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கலந்தாய்வின் மூலம் கல்லூரிகள் ஒதுக்கப்படும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 450 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 54 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. இந்தக் கல்லூரிகள் 2023-2024ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்காக தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார்.

TNEA 2023 தரவரிசை பட்டியல் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்

  • தமிழ்நாடு பொறியியல் அட்மிஷன் இணையதளத்துக்கு செல்ல https://www.tneaonline.org/ என்ற முகவரிக்கு செல்லவும்
  • மாணவர்களின் பதிவு எண், கடவுச்சொல்லைப் பயன்படுத்தி லாகின் செய்யவும்.
  • பின்னர் PDF முறையில் கொடுக்கப்பட்டுள்ள தரவரிசை பட்டியலை பதிவிறக்கம் செய்து சரிபார்த்து கொள்ளலாம்.

தரவரிசைப் பட்டியல்

2023–24 பொறியியல் கல்லூரி சேர்க்கை தரவரிசையில், திருச்செந்தூரைச் சேர்ந்த நேத்ரா முதலிடத்தையும், தர்மபுரியைச் சேர்ந்த ஹரிணிகா இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

முறையே மூன்றாம் இடத்தை திருச்சியைச் சேர்ந்த ரோஷினி பானு பிடித்துள்ளார். அதேபோல், பிற ஸ்ட்ரீம்களுக்கான முதல் 10 இடங்கள் பிடித்த மாணவர்களின் பட்டியல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

வெளியான தரவரிசை பட்டியலில் குழப்பம் ஏதேனும் இருந்தால் மாணவர்கள் உடனடியாக புகார் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் புகார்களை சமர்ப்பிக்க அல்லது தரவரிசை குறித்த கேள்விகளைக் கேட்க ஜூன் 30 வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டதும், ஜூலை மாதம் கலந்தாய்வு தொடங்கும் என உயர்க்கல்வித்துறை அறிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்