Tue ,Dec 05, 2023

சென்செக்ஸ் 68,865.12
1,383.93sensex(2.05%)
நிஃப்டி20,686.80
418.90sensex(2.07%)
USD
81.57
Exclusive

TNPSC Current Affairs 2022: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கான பொது அறிவுச் செய்திகள்

Gowthami Subramani June 06, 2022 & 13:30 [IST]
TNPSC Current Affairs 2022: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கான பொது அறிவுச் செய்திகள்Representative Image.

TNPSC Current Affairs 2022: அரசு நடத்தும் தேர்வுகளில், பொதுத் தேர்வின் பிரிவில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களுக்குப் பயனளிக்கும் வகையில், அதில் கேட்கப்படும் வினாக்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன (TNPSC Current Affairs 2022).

அதன் படி, ஜூன் 6 ஆம் தேதியான இன்று நாம் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில், தேர்வில் கேட்கப்பட்டும் வினாக்களுக்கு ஏற்றவாறு அமையக் கூடியவற்றைக் காணலாம் (TNPSC Current Affairs June 6 2022).

மண்ணை காப்போம் இயக்கம் யாரால் முன்னெடுக்கப்பட்டது?

சத்குரு ஜக்கி வாசுதேவ்

சுற்றுச்சூழலை காக்கும் வகையில், எந்த சர்வதேச இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்?

சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை (லைப்)

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பசுமை முதன்மையாளர் விருதை வழங்கிய நிறுவனம்? (TNPSC Current Affair June Month)

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்

சமீபத்தில் எந்த மாநிலத்தில் பெரும் அளவு அமைச்சரவை மாற்றம் நடைபெற்றது?

ஒடிசா மாநிலம்

இந்திய ரூபாய் நோட்டுகளில் புதிதாக யாருடைய படங்கள் இடம்பெற உள்ளது?

அப்துல்கலாம், ரவீந்திரநாத் தாகூர்


Representative Image. TNPSC Preparation Tips in Tamil: வீட்டிலேயே இப்படி படிங்க… நீங்க டிஎன்பிஎஸ்சி தேர்வுல கண்டிப்பா பாஸ்…!


இந்திய ரூபாய் நோட்டுகளில் அப்துல் மற்றும் தாகூர் ஆகிய தலைவர்களின் படங்கள் இடம்பெற வலியுறுத்திய நாள்?

ஜூன், 2022

இந்திய ரூபாய் நோட்டுகளில், வாட்டர்மார்க் படங்களைச் சிறப்பாகத் தேர்வு செய்து அரசுக்கு பரிசீலனை செய்பவர் யார்?

டெல்லி ஐஐடி பேராசிரியர் திலீப் சகானி

உலக ரத்ததான தினம் எந்த நாள் அனுசரிக்கப்பட உள்ளது?

ஜூன் 14

உயிரி எரிபொருள்கள் மீதான தேசிய கொள்கை எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது? (TNPSC Latest Current Affairs)

2018

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அதிக வயதான வீரர் என்ற பெருமையைப் பெற்றவர்?

ரஃபேல் நடால்

புதிய கற்காலத்தைச் சேர்ந்த உருக்காலை எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

சிவகங்கை அருகே உள்ள புதுப்பட்டி

தமிழகத்தில் முதல் முறையாக விலங்குகளுக்கான சிறப்பு மேம்பாலம் எங்கு அமைக்கப்பட உள்ளது?

வாடிப்பட்டி

அசர்பைஜான் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஜோடி?

சுவப்னில், ஆசி

கஜகஸ்தான் மல்யுத்த போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனைகள்?

மனிஷா சரிதா மோர்

ஜப்பானில் நடைபெற்ற 29-ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் தமிழகத்தின் எந்த திரைப்படத்திற்கு விருது கிடைத்தது?

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

இந்தியாவில் ஒரு ஜிகாவாட் திறனுள்ள சூரிய மின் நிலையத்தை நிறுவிய முதல் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம்?

என்எல்சி நிறுவனம்


Representative Image. டிஎன்பிஎஸ்சி எக்ஸாம் ஃபர்ஸ்ட் அட்டெம்ப்ட்லயே பாஸ் பண்ணனுமா..? இத மட்டும் ஃபாலோப் பண்ணுங்க.


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்? (Current Affairs June Month)

ஸ்வியாடெக்

24 ஆவது கோடைக்கால காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற இடம்?

பிரேசில்

பிரேசிலில் நடைபெற்ற காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழர்கள்?

ஜெர்லின் அனிகா

பிரித்திவி சேகர்

இந்தியாவில் பிறக்கும் 1000 குழந்தைகளில் ஓராண்டுக்குள் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை?

28

2020 ஆம் ஆண்டின் படி, இந்தியாவில் அதிக குழந்தை இறப்பு விகிதம் உள்ள மாநிலம்?

மத்திய பிரதேசம்

2020 ஆம் ஆண்டின் படி, இந்தியாவில் குறைந்த குழந்தை இறப்பு வீதம் உள்ள மாநிலம்?

மிசோரம்

குழந்தை பிறப்பு வீதம் அதிகமாக உள்ள இந்திய மாநிலம்?

பீகார்

மூன்று விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்துக்கு அனுப்பிய நாடு எது?

சீனா

2020 ஆம் ஆண்டுக்கான பசுமை விருதைப் பெற்ற தமிழக ஆட்சியர்கள் யார்?

சேகர் – மதுரை, தா மோகன் - விழுப்புரம், முருகேஷ் – திருவண்ணாமலை

உலகின் தட்ப வெப்பநிலை, பூகம்பம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களைத் துல்லியமாகக் கண்டறிய இஸ்ரோ நாசா இணைந்து உருவாக்கும் செயற்கைக்கோள்? (நடப்பு நிகழ்வுகள்)

நிஷார்

இரண்டாயிரம் ஆண்டுகால சுவர் கண்டுபிடிக்கப்பட்ட இடம்?

பாட்னா பீகார்


Representative Image. எக்ஸாம்ல சீக்கிரமா மேக்ஸ் போட முடிலயா…! இந்த ட்ரிக்-அ ஃபாலோப் பண்ணுங்க…..


நாடு முழுவதும் கால்நடைகளுக்கான தர குறியீடுகளை எந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது?

ஜூலை 2023

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துறைமுகத்தில் சுற்றுலா சொகுசு கப்பல் தொடங்கி வைத்தார். அதன் பெயர்?

எம்பிரஸ்

உலக சுற்றுச்சூழல் தினத்தின் இந்த ஆண்டுக்கான கருப்பொருள் என்ன?

சிறு தீவுகளும், காலநிலை மாற்றமும்

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான மேலும் சில அப்டேட்டுகளைப் பெற நமது searcharoundweb தளத்துடன் இணைந்திருங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்