Thu ,Dec 07, 2023

சென்செக்ஸ் 69,653.73
357.59sensex(0.52%)
நிஃப்டி20,937.70
82.60sensex(0.40%)
USD
81.57
Exclusive

TNPSC Current Affairs: போட்டித் தேர்வு எழுதுபர்களுக்கு ரொம்ப யூஸ்ஃபுலா இருக்கும்…. இத கண்டிப்பாக தெரிஞ்சிக்கணும்….!

Gowthami Subramani June 10, 2022 & 12:00 [IST]
TNPSC Current Affairs: போட்டித் தேர்வு எழுதுபர்களுக்கு ரொம்ப யூஸ்ஃபுலா இருக்கும்…. இத கண்டிப்பாக தெரிஞ்சிக்கணும்….!Representative Image.

TNPSC Current Affairs: உங்களின் அரசு வேலை வாங்குவது கனவாகவே போய் விடுமோ என்ற கவலை இனி உங்களுக்குத் தேவையில்லை. ஒவ்வொரு நாளுக்கான நடப்பு நிகழ்வுகளையும் இந்தப் பகுதியில் காண்போம்.

இன்றைக்கான (ஜூன் 10 ஆம் தேதி) நடப்பு நிகழ்வுகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம் (Current Affair June Month 2022).

பாரத் நெட் திட்டத்தில் கண்ணாடி இழை கம்பிவடம் பதிக்கும் பணி

2011 ஆம் ஆண்டு மத்திய அரசு திட்டமான National Optical Fibre Network (NOFN), 2015 ஆம் ஆண்டு Bharat Net Project என மாற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாரத் நெட் திட்டம் 9 கிராமங்களுக்கு செயல்படுத்தப்பட உள்ளது.

இது முதன் முதலில் கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள முத்தலக்குறிச்சி ஊராட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து துவக்கி வைக்கப்பட்டது (Current Affairs June 10 2022 in Tamil).

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளையும் கண்ணாடி இழை கம்பி வடம் மூலம் இணைத்து, அதிவேக இணைய இணைப்பு வழங்குவதாகும். இத்திட்டம், தமிழக அரசின் கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

“ஹொமோசெப்” ரோபோ

சென்னை ஐஐடி மாணவர்கள், சென்னை ஐஐடி பேராசிரியராக விளங்கும் ராஜகோபால் தலைமையில், மனிதக் கழிவுகளை அகற்றும் பணிக்கு “ஹோமோசெப்” ரோபோ தயார் செய்யப்பட்டுள்ளது.

இது வரை பெரு நிறுவனங்களுக்கான சமூக பங்களிப்பு நிதி மூலம் 10 “ஹோமோசெப்” ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது, இதை அனைத்து இடங்களிலும் செயல்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோமோசெப் ரோபோவில் உள்ள தனிப்பயனாக்கப்பட்ட ரோட்டரி பிளேடு மெக்கானிசம் மூலம், கழிவுநீர்த் தொட்டியில் உள்ள கடினமான கசடுகளையும் ஒன்று சேர்த்து உறிஞ்சும் மெக்கானிசம் (Suction Mechanism) மூலம் தொட்டியில் உள்ள கழிவுகளை பம்ப் செய்யலாம் (Current Affairs Today,).

விமான நிலையத்தில் ரோபோக்கள்

கோவை விமான நிலையத்தில், பயணிகளுடன் உரையாடுவதற்கும், உதவக் கூடிய வகையிலும் இரண்டு ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு (ARTIFICIAL INTELLIGENCE - AI) என்ற திட்டத்தின் மூலம் இயங்கக் கூடிய இந்த அதிநவீன ரோபோக்களிடம் பயணிகள் அவர்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற முடியும். இதற்கு முதற்கட்டமாக இரண்டு ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உயிரி தொழில்நுட்ப தொழில்முனைவு நிறுவனங்களின் கண்காட்சி

டெல்லியில் நடந்த உயிரி தொழில்நுட்ப தொழில்முனைவு நிறுவனங்களின் கண்காட்சி ஜூன் 9 ஆம் நாள் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்டது.

கண்காட்சியின் முக்கிய நோக்கம் “உயிரி தொழில்நுட்ப தொழில் முனைவு புத்தாக்கங்கள் (Startup): தற்சார்பு இந்தியாவை நோக்கி” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது (Current Affairs for Competitive Exams).

மாநிலக் கல்விக் கொள்கை முதல் கூட்டம்

National Education Policy கடந்த 2020 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதற்கு எதிராக மாநிலக் கல்விக் கொள்கை (State Education Policy) அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.

இதன் படி, மாநிலக் கல்விக் கொள்கைக்கான முதல் கூட்டம் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஜூன் 15, 2022 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது ((TNPSC Current Affairs 2022).

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட்

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை (Logo) சின்னத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். இதில், அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், பி.கே.சேகர்பாபு, சிவ.வீ.மெய்யநாதன், மா.மதிவேந்தன், பெருநகர சென்னை ஊராட்சி மேயர் ஆர்.பிரியா, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆகியோர் பங்கு கொண்டனர்.

44- ஆவது போட்டிக்கான இலச்சினை (Logo) மற்றும் சின்னத்தை மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார். இந்த சின்னத்தின் பெயர் தம்பி என வைக்கப்பட்டுள்ளது. இதற்கான Hashtag-ஐ #CHESS CHENNAI2022 என்று வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் (TNPSC Current Affairs June 2022).

விலங்குகளுக்கான இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி

விலங்குகளுக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசியை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஜூன் 9 அன்று அறிமுகம் செய்தார்.

“அனோகோவாக்ஸ்” என்பது விலங்குகளுக்கான இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி ஆகும். இது, ஹரியானாவில் உள்ள இந்திய வேளாண் கவுன்சிலின் (ஐசியேஆர்) தேசிய குதிரைகளுக்கான ஆராய்ச்சி மையம் (என்ஆர்சி) சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

இது விலங்குகளின் வீரியத்தை அழிக்கக் கூடிய சார்-கோவிட் டெல்டா வகை தடுப்பூசியாகும்.

இந்தத் தடுப்பூசி, நாய்கள், சிறுத்தை, சிங்கம், எலிகள் மற்றும் முயல்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்