நம்முடைய நாடு அனைத்து வளங்களைக் கொண்ட செல்வ செழிப்பான நாடு. மன்னர் ஆட்சி இருக்கும் போது வணிகம் என்ற பெயரில் மற்ற நாட்டை சேர்ந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே வந்து அடிமைப்படுத்த தொடங்கினர். அதன் விளைவாக சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் வெள்ளையர்களின் பிடியில் நம்முடைய நாடு சிக்கி சின்னப்பினமானது. பல சுதந்திர போராட்ட வீரர்கள் தங்களுடைய இன்னுயிரை மாய்த்து 1947 இல் சுதந்திரத்தை வென்றனர். இருப்பினும் தலைவராக ஆறாம் ஜார்ஜ் மன்னர் மற்றும் மவுண்ட் பேட்டன் பிரபு இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்தார்.
தங்களின் முக்கிய கடமையாக இந்தியாவிற்கான அரசியலமைப்பை உருவாக்க நினைத்தனர். அதனால் அதற்கான உறுப்பினர்களை தேர்தெடுக்கத் தொடங்கினர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. நீண்ட ஆலோசனைகள், திருத்தங்கள், கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு நவம்பர் 4, 1947 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது.
அரசியலமைப்பை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்வதற்கு முன்பு இரண்டு ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் வரையிலான பொது அமர்வுகளில் 166 சட்டமன்றம் கூடியது. நீண்ட விவாதங்களுக்கு பின்னர் 444 கட்டுரைகள் 22 பாகங்கள் 12 அட்டவணைகள் 118 திருத்தங்களுடன் இந்திய நாட்டிற்கான அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. ஹிந்தி மற்றும் ஆங்கில மொழியில் அறிக்கை எழுதப்பட்டது. இறுதியாக ஜனவரி 24, 1950 அன்று 308 சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு நகல்களில் கையொப்பமிட்டு உறுதிப்படுத்தினர். அவை இன்றளவும் பொக்கிஷமாக பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. காந்தி அவர்களின் ஆலோசனையின் படி 1950, ஜனவரி 26 அன்று இந்திய நாடு குடியரசு நாடாக அங்கீகரிக்கப்பட்டது.
சரி இப்போ முதன் முதலில் எங்கு, எப்போது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது என்று தெரியுமா? ஜனவரி 26, 1950 ஆம் நாள் காலை 10.18 மணிக்கு இந்தியா குடியரசு நாடாக மாற்றப்பட்டது. அடுத்த ஒரு சில நிமிடங்களில் இந்திய நாட்டிற்கான முதல் குடியரசு தலைவராக டாக்டர். ராஜேந்திர பிரசாத் பதவியேற்றார். முதல் குடியரசு தினம் செங்கோட்டையில் பின்னர் நேஷனல் ஸ்டேடியம், கிங்ஸ்வே கேம்ப், அதன்பின் ராம்லீலா மைதானத்திலும் நடைபெற்றது. 1950 முதல் 1954 ஆம் ஆண்டு வரை நிலையான இடத்தில் கொண்டாடவில்லை. 1955இல் ராஜ்பாத்தை நிரந்தர இடமாக தேர்வு செய்தனர். அன்று முதல் இன்று வரை அங்கு தான் நம்முடைய சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…