Sat ,Sep 23, 2023

சென்செக்ஸ் 66,009.15
-221.09sensex(-0.33%)
நிஃப்டி19,674.25
-68.10sensex(-0.34%)
USD
81.57
Exclusive

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 24 – இன்றைய தினத்தின் நடப்பு நிகழ்வுகள்....!

Gowthami Subramani August 30, 2022 & 18:40 [IST]
Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் 24 – இன்றைய தினத்தின் நடப்பு நிகழ்வுகள்....!Representative Image.

Yesterday Current Affairs in Tamil: ஆகஸ்ட் மாதம் 24 ஆம் நாளுக்கான நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். மேலும், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்களை விடைகளுடன் தெரிந்து கொள்ள நமது searcharoundweb பக்கத்தில் இணைந்திருங்கள்.

நாடுகடந்த கல்விக்கான பணிக்குழு

எந்த நாட்டுடன் இணைந்து, நாடுகடந்த கல்விக்கான பணிக்குழுவை நிறுவுவதாக இந்தியா அறிவித்தது?

விடை: ஆஸ்திரேலியா

இந்தியாவின் நடுவண் கல்வியமைச்சராக விளங்கும் தர்மேந்திர பிரதான் மற்றும் அவருக்கு இணையான ஆஸ்திரேலிய பிரதிநிதி இணையமைச்சரான ஜேசன் கிளேர் போன்றோர் நாடுகடந்த கல்விக்கான பணிக்குழுவை நிறுவுவதாக அறிவித்துள்ளனர். மேலும், இந்தப் பணிக்குழு இரு நாடுகளிலும் இருக்கும் ஒழுங்குமுறை அமைப்புகளைப் பற்றிய பகிரப்பட்ட புரிதலை உருவாக்கவும், நிறுவனங்களின் இருவழி இயக்கத்திற்கான வாய்ப்புகள் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், ஆஸ்திரேலியா இந்திய கல்விக் கவுன்சிலின் (AIEC) 6-ஆவது கூட்டத்திற்கு நடுவண் அமைச்சர் இணைத் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய இந்திய தூதரகம்

இந்தியா சமீபத்தில் அதாவது ஆகஸ்ட் 2022-ல் எந்த நாட்டில் புதிய இந்தியத் தூதரகத்தை திறந்து வைத்தது?

விடை: பராகுவே

இந்தியாவின் நடுவண் வெளியுறவுத் துறை அமைச்சராக விளங்கும் S. ஜெய்சங்கர், பராகுவேயில் உள்ள அசன்சியனில் புதிய இந்தியத் தூதரகத்தைக் கூட்டாகத் திறந்து வைத்தார். மேலும், இரு நாடுகளும் தூதரக உறவுகளை நிறுவி கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பராகுவே, குடியரசிற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஒருவர் செல்வது இது முதல் முறையாகும்.

SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்’ எந்த இடத்தில் நடைபெறும்?

விடை: தாஷ்கண்ட்

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கன்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களின் வருடாந்திர கூட்டத்தில் நடுவண் பாதுகாப்பு அமைச்சராக விளங்கும் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். மேலும், இந்த கூட்டத்தில் இந்தியாவைத் தவிர, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றனர். மேலும், சமர்கண்டில் நடைபெற உள்ள SCO நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

உலக நீர் வாரம்

2022 ஆம் ஆண்டிற்கான உலக நீர் வாரத்திற்கான கருப்பொருள்?

விடை: Seeing the Unseen: The Value of Water

ஆண்டுதோறும் ஸ்டாக்ஹோம் பன்னாட்டு நீர் நிறுவனம் (SIWI), உலக நீர் வாரத்தை நடத்துகிறது. இந்த ஆண்டு இந்த நீர்வாரம் ஆகஸ்ட் 23 ஆம் நாள் முதல் செப்டம்பர் 1 ஆம் நாள் வரை கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டில், கொண்டாடப்படும் உலக நீர் வாரத்திற்கான கருப்பொருள் “Seeing the Unseen: The Value of Water” என்பதாகும். இது உலகளாவிய அளவில் நீர் சவால்களை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு இயக்கமாக உள்ளது.

கார்பா – பொருள்

UNESCO-வின் தொட்டுணர முடியாத கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இணைக்கக் கூடிய இந்தியாவால் பரிந்துரைக்கப்பட்ட ‘கார்பா’ என்பதற்கான அர்த்தம் என்ன?

விடை: நடன வடிவம்

UNESCO-வின் தொட்டுணர முடியா கலாச்சார பாரம்பரிய பட்டியலில், இணைக்கக் கூடிய ‘கார்பா’ என்ற நடன வடிவத்தை சமீபத்தில் இந்தியா பரிந்துரைத்துள்ளது. UNESCO-ன் தொட்டுணர முடியா கலாச்சார பாரம்பரியப் பிரிதிநிதிகளில் கடந்த ஆண்டு ‘துர்கா பூஜை’ இணைக்கப்பட்டது. கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூலை மாதம், இந்த தொட்டுணர முடியா கலாச்சார பாரம்பரியத்தைக் காப்பதற்கு, அரசுகளுக்கிடையேயான குழுவில் பணியாற்றுவதற்கு இந்தியா UNESCO ஆல் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Tags:

Yesterday Current Affairs in Tamil | Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | GK Today Current Affairs in Tamil | Yesterday Current Affairs | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்