Tue ,Apr 23, 2024

சென்செக்ஸ் 73,648.62
560.29sensex(0.77%)
நிஃப்டி22,336.40
189.40sensex(0.86%)
USD
81.57
Exclusive

Yesterday Current Affairs in Tamil: ஜூலை 26, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்....!

Gowthami Subramani [IST]
Yesterday Current Affairs in Tamil: ஜூலை 26, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்....!Representative Image.

Yesterday Current Affairs in Tamil: ஜூலை மாதம் 26 ஆம் நாளுக்கான நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம். மேலும், டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படும் வினாக்களை விடைகளுடன் இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

விண்வெளி நிலைய தொகுதி

“வென்டியன் – Wentian” என்ற விண்வெளி நிலைய தொகுதியை வெற்றிகரமாக ஏவிய நாடு எது?

விடை: சீனா

வென்டியன் எனப்படும் விண்வெளி நிலைய தொகுதியான தனது இரண்டாவது தொகுதியை சமீபத்தில் டியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு வெற்றிகரமாக ஏவியுள்ளது. தைகோனாட்ஸ் என்றும் அழைக்கப்படும் சீன விண்வெளி வீரர்கள் பல்வேறு அறிவியல் சோதனைகளை மேற்கொள்ள அனுமதிக்கும் உபகரணங்களை இந்தத் தொகுதி தன்னகத்தே கொண்டுள்ளதாக அமைகிறது.

உலக மக்கள் தொகை நாள்

ஆண்டுதோறும், “உலக மக்கள் தொகை நாள்” என அனுசரிக்கப்படும் தேதி என்ன?

விடை: ஜூலை 11

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 11 ஆம் நாள் உலக மக்கள்தொகை நாளாக அனுசரிக்கப்படுகிறது. “A world of 8 billion: Towards a resilient future for all – Harnessing opportunities and ensuring rights and choices for all” என்பது நடப்பு ஆண்டான 2022 ஆம் ஆண்டின் உலக மக்கள் தொகை நாளுக்கான கருப்பொருள் ஆகும். மக்கள் தொகைப் பெருக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரனமாக 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் 1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி முதல் இந்த நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கிரிக்கெட் தகவல்கள்

2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் அணித் தலைவியாக நியமிக்கப்பட்டவர் யார்?

விடை: ஹர்மன்ப்ரீத் கௌர்

2022 ஆம் ஆண்டின் காமல்வெல்த் போட்டி பர்மிங்காவில் நடைபெற உள்ளது. இதில் விளையாட இருக்கும் இந்திய பெண்கள் அணியின் அணித் தலைவியாக ஹர்மன்பிரீத் கௌர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தொடக்க ஆட்டக்காரராக விளங்கும் ஸ்மிருதி மந்தனா அணியின் துணைத் தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார். 1998 ஆம் ஆண்டு கோலாலம்பூர் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஒரு நாள் போட்டிகள் நடைபெற்ற பிறகு, டி20 கிரிக்கெட் காமன்வெல்த் போட்டிகளில் பெண்கள் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.

சர்வதேச மலாலா நாள்

எந்த நாள் சர்வதேச மலாலா நாளாக அனுசரிக்கப்படுகிறது?

விடை: ஜூலை 12

உலகெங்கிலும் உள்ள பெண்களின் கல்வி உரிமைக்காக பாடுபடும் நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாயை கௌரவிக்கும் வகையில், ஆண்டு தோறும் ஜூலை 12 ஆம் நாள் சர்வதேச மலாலா நாளாக அனுசரிக்கப்படுகிறது. மலாலா 2012 ஆம் ஆண்டு பெண் குழந்தைகளின் கல்விக்காக பிரச்சாரம் செய்ததற்காக தலிபான்களால் சுடப்பட்டார்.

மலாலாவும், அவரது தந்தையும் இணைந்து மலாலா நிதியம் ஒன்றை நிறுவனம். இது பெண்களின் கல்வியை ஆதரிக்கும் வகையில் அமைந்த ஒரு தளமாகும். 2014 ஆம் ஆண்டில், மலாலா அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்று, 2017 ஆம் ஆண்டு ஐ.நா. அமைதி தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுத் தகவல்கள்

ஆசிய U-20 மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்ற நாடு எது?

விடை: பஹ்ரைன்

ஆசிய U-20 மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் பஹ்ரைனின் மனாமாவில் நடைபெற்றது. இந்த போட்டியில், இந்தியாவின் U-20 மல்யுத்த அணி 4 தங்கம் உட்பட 22 பதக்கங்களை வென்றுள்ளது. மேலும், இந்தப் போட்டியில் இந்தியா 9 வெள்ளி & 9 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. அதன் படி, 22 பதக்கங்களில் பெண்கள் அணி 3 தங்கப்பதக்கங்கள் உட்பட 10 பதக்கங்களை வென்றது. U-15 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய வீரர்கள் 8 பதக்கங்களை வென்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Yesterday Current Affairs in Tamil | Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்