Sat ,Dec 02, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

விளையாட்டால் விபரீதம்... பரிபோன 11 வயது சிறுவன் உயிர்...

Nandhinipriya Ganeshan September 26, 2022 & 10:45 [IST]
விளையாட்டால் விபரீதம்... பரிபோன 11 வயது சிறுவன் உயிர்...Representative Image.

சென்னை மாதவரம் அடுத்த புழல்  புத்தகரம் காமராஜர் நகர் சேர்ந்த சீனிவாசனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் இளையமகன் கார்த்திக் (11) அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு சென்ற நேரத்தில் மாலை நேரத்தில் சிறுவர்கள் இருவரும் வீட்டில்  விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது அண்ணன், தம்பி இருவரும்  தூக்கு போடுவது எப்படி  என்பதை  செய்து பார்த்துள்ளனர். அதில் படுக்கை  அறையில் உள்ள  மின்விசிறியில்  சேலையை  கழுத்தில்  போட்டுகொண்டு  நடித்து  பார்த்துள்ளனர். 

அதில் எதிர்பாராதவிதமாக கார்த்திக் கழுத்தில் சேலை மாட்டிக்கொண்டுள்ளது. இதனை கண்ட அண்ணன்  உடனடியாக  வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தவர்களை உதவிக்கு அழைத்து தம்பியை மீட்டுள்ளான். இருப்பினும் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த புழல் காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விளையாட்டு என எண்ணி விபரீதத்தில் செய்த செயலால் ஒரு உயிர் பரிபோனது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்