சென்னையில் 2 வயது குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தபோது மாடியில் இருந்து கீழே விழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயல் கங்கையம்மன் பகுதியில் உள்ள 8வது தெரு பகுதியில் தியா என்ற 2 வயது பெண் குழந்தை தனது வீட்டின் முதல் மாடியில் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளது.
குழந்தை விளையாடிக் கொண்டிருந்த நிலையில், குடும்பத்தினர் அசந்த நேரத்தில், பால்கனியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளது.
இதில் குழந்தை கடுமையாக காயமடைந்த நிலையில், குழந்தை சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…