சேலத்தில் கருப்பூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவனுடன் திருமணம் செய்து கொள்ளாமலே குடும்பம் நடத்திய 20 வயது பட்டதாரி பெண்.
சேலம், கருப்பூர் பகுதியை சேர்ந்த 17 வயது இளைஞன் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அப்படியாக திடீரென்று கடந்த ஏப்ரல் மாதம் கல்லூரிக்கு சென்ற இளைஞன் வீட்டிற்கு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், பதட்டமடைந்த அவரின் பெற்றோர்கள் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர், அத்துடன் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார் அந்த மாணவனுடன் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று விசாரிக்க ஆரம்பித்தனர். அப்போது 20 வயது பட்டதாரி பெண்ணுடன் சிறுவனுக்கு பழக்கம் இருந்தது தெரியவந்தது. மேலும் அந்த பெண்ணும் சிறுவன் மாயமான அதே நாளில் காணவில்லை என்று தெரியவந்தது. உடனே விசாரணையை தீவிர படுத்திய பொது அவர்களுக்கு தெரியவந்த அதிர்ச்சி தகவல். அவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி அருகே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வருவதாக தெரியவந்தது. பின்பு அவர்களை பிடித்து விசாரித்த பொது, போனில் ஆன்லைன் கேம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாகவும், அப்படியே காதலிக்க ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது.
சரி எப்படியோ கண்டு பிடிச்சாச்சு, அடுத்து அந்த சிறுவனை அவனின் பெற்றோருடன் அனுப்பி வைக்க போலீசார் ஏற்பாடு செய்து கொண்டிருந்த போது அவர்களுக்கு காத்திருந்த அடுத்த ஷாக். அந்த பெண் தற்போது மூன்று மாதம் கர்பமாக இருக்கிறாராம். இதை கேட்டதும் பெண்ணின் பெற்றோர் உறைந்து போயினர். என்ன தான் இருந்தாலும் 17 வயது சிறுவனுடன் குடும்பம் நடத்தியதற்காக அந்த பெண்ணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பிறகு இருவரையும் சேலம் அரசு மருத்துவாமணியில் பரிசித்தனைக்கு அனுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…