திருப்பூரில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அருகே உள்ள திருமுருகன்பூண்டியில், விவேகானந்தா சேவாலய விடுதி உள்ளது. இந்த விடுதியில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு மூன்று குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஐந்து பேர், உடல் நலம் பாதிக்கப்பட்டு வயிற்று வலி, வாந்தி போன்றவற்றால் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அந்தப் பகுதி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அமமுக தலைவரான டிடிவி தினகரன் ட்வீட் செய்து குழந்தைகளின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு சரியான சிகிச்சை அளிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும், இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…