Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,086.15
-402.84sensex(-0.56%)
நிஃப்டி21,868.60
-127.25sensex(-0.58%)
USD
81.57
Exclusive

‘சாதிச்சிட்டோம் மாறா’ - அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம்! 

KANIMOZHI Updated:
‘சாதிச்சிட்டோம் மாறா’ - அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம்! Representative Image.

வடசென்னை அனல் மின் நிலையத்தின் முதலாவது உள்ள மூன்று அலகுகளில் பல மாதங்களுக்கு பிறகு உச்சபட்சமாக 615 மெகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 

பல மாதங்களாக முதலாவது நிலையில் உள்ள 3அலகுகளில் ஏதேனும் பழுது ஏற்பட்டு முழுமையாக மின் உற்பத்தி செய்யப்படாமல் இருந்தது. பழுது சரி செய்யப்பட்டாலும் முழு திறன் உற்பத்தி செய்யப்படாமல் குறைந்த அளவிலே மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அண்மையில் வடசென்னை அனல் மின் நிலையத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டு முழு மின்சாரம் உற்பத்திக்கான வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில் வடசென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் உள்ள மூன்று அலகுகளில் பல மாதங்களுக்கு பிறகு உச்சபட்சமாக 615 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 

இதனை தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி பெருமிதம் தெரிவித்துள்ளார். 615 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது மின்வாரியத்தின் சாதனைகளில் மைல்கல் என அமைச்சர் செந்தில்பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்