Mon ,Jun 05, 2023

சென்செக்ஸ் 62,547.11
118.57sensex(0.19%)
நிஃப்டி18,534.10
46.35sensex(0.25%)
USD
81.57
Exclusive

டிசம்பர் 9ம் தேதி இதை செய்யாதீங்க... வெளியானது பரபரப்பு எச்சரிக்கை!

Kanimozhi Updated:
டிசம்பர் 9ம் தேதி இதை செய்யாதீங்க... வெளியானது பரபரப்பு எச்சரிக்கை!Representative Image.

தேனி - போடிநாயக்கனூர் இடையே அகல ரயில் பாதை அதிநவீன பெட்டியுடன் சோதனையோட்டம் செய்யப்பட உள்ளதால் டிசம்பர் 9ம் தேதி யாரும் அப்பகுதி தண்டவாளத்தை கடக்க வேண்டாம் என எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தேனி - போடிநாயக்கனூர் இடையே அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்து கடந்த டிசம்பர் 2 அன்று அதிவேக ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த 15 கிமீ தூரத்தை 120 கிமீ வேகத்தில் ரயில் இன்ஜின் 9 நிமிடங்கள் 20 நொடிகளில் கடந்தது. 

ரயில் பாதையில் ரயில் செல்லும் போது அதிர்வுகள் ஏற்படுகிறதா,  வேறு எதுவும் சிறு குறைபாடுகள் இருக்கிறதா என்பதை கண்காணிக்க நவீன ஆய்வு ரயில் பெட்டி (Oscillation Monitoring Car) ஒன்று உள்ளது. 

ஆய்வு  முடிவுகளை இந்தப் பெட்டியில் உள்ள கணிப்பொறி உடனுக்குடன் பதிவு செய்து வெளியிடும். இந்த நவீன ஆய்வு ரயில் பெட்டியுடன் 125 கிலோமீட்டர் வேகத்தில் டிசம்பர் 9 அன்று தேனி - போடிநாயக்கனூர் புதிய ரயில் பாதையில் ஆய்வு நடத்தப்பட இருக்கிறது. 

இந்த ஆய்வு டிசம்பர் 9 அன்று மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த அதிவேக தொழில்நுட்ப ஆய்வு நடைபெறும் நேரத்தில் பொதுமக்கள் ரயில் பாதையை நெருங்கவோ, கடக்கவோ வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்