Sun ,Dec 10, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

காணும் பொங்கல் அட்ராசிட்டி... மெரினாவில் மட்டும் இத்தனை டன் குப்பைகள் அகற்றமா? 

KANIMOZHI Updated:
காணும் பொங்கல் அட்ராசிட்டி... மெரினாவில் மட்டும் இத்தனை டன் குப்பைகள் அகற்றமா? Representative Image.

காணும் பொங்கல் தினத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் கடற்கரைகளிலிருந்து மட்டும் 36.338 டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. 

சென்னையில் காணும் பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு மெரினா பெசன்ட் நகர் திருவான்மியூர் மற்றும் அக்கரை கடற்கரைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வருகை தந்து கொண்டாடினர்.

 

இந்நிலையில் நேற்று இரவு முதல்  சென்னை மாநகராட்சியின் சார்பில் தீவிரத் தூய்மை பணி நடைபெற்றது. காணும் பொங்கல் தினத்தில் சென்னையின் முக்கிய கடற்கரைகளில் இருந்து மட்டுமே 36.338 டன் குப்பைக் கழிவுகளை சுத்தம் செய்துள்ளதாக மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது. 


அதிகபட்சமாக மெரினா கடற்கரையில் இருந்து மட்டும் 21.085 மெட்ரிக் டன் குப்பை கழிவுகளை அகற்றியுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்