Mon ,Jun 05, 2023

சென்செக்ஸ் 62,547.11
118.57sensex(0.19%)
நிஃப்டி18,534.10
46.35sensex(0.25%)
USD
81.57
Exclusive

சில்க் ஸ்மிதாவிற்கு இப்படியொரு ரசிகரா?... சிலிர்க்க வைத்த சம்பவம்! 

Kanimozhi Updated:
சில்க் ஸ்மிதாவிற்கு இப்படியொரு ரசிகரா?... சிலிர்க்க வைத்த சம்பவம்! Representative Image.

நடிகை சில்க் சுமிதாவின் 63 வது பிறந்த தினத்தை தூய்மை பணியாளர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய தீவிர ரசிகர் சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்துள்ளார். 

இன்று காந்த கண்ணழகி சில்க் ஸ்மிதாவின் 63வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோட்டில் தேநீர் கடை நடத்தி வரும் சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகரான குமார் என்பவர், அப்பகுதி தூய்மை பணியாளர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். ஆண்டுதோறும் தவறாமல் சில்க் ஸ்மிதா பிறந்தநாள் அன்று நண்பர்களுடன் கேக் வெட்டுவதை வழக்கமாக கொண்டுள்ள குமார், இந்த ஆண்டு தனது மகளின் ஆசையை நிறைவேற்ற இவ்வாறு செய்துள்ளார். 

அத்துடன் 50 தூய்மை பணியாளர்களுக்கு இலவசமாக புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கி சில்க் ஸ்மிதா பிறந்தநாளை சிறப்பாக மாற்றியுள்ளார். சில்க் ஸ்மிதா இறந்து இத்தனை ஆண்டுகள் ஆன போதும், அவரது பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடிய தீவிர ரசிகர் குறித்த செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இதுமட்டுமின்றி ஆண்டுதோறும் சில்க் ஸ்மிதாவின் அழகிய புகைப்படங்களைக் கொண்ட காலண்டர்களை தனது கடை வாடிக்கையாளர்களுக்கு பரிசாக வழங்கி வரும் குமார், ஆண்டுதோறும் வழங்கப்படும் காலண்டர்களை கடையில் வரிசையாக மாட்டியும் வைத்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்