Wed ,Dec 06, 2023

சென்செக்ஸ் 69,296.14
431.02sensex(0.63%)
நிஃப்டி20,855.10
168.30sensex(0.81%)
USD
81.57
Exclusive

Bannari Temple | பலத்த பாதுகாப்புடன் நிகழும் பண்ணாரி அம்மன் திருவிழா!

Manoj Krishnamoorthi March 21, 2022 & 14:15 [IST]
Bannari Temple | பலத்த பாதுகாப்புடன் நிகழும் பண்ணாரி அம்மன் திருவிழா!Representative Image.

ஈரோடு மாவட்டத்தில்  மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்று சத்தியமங்கலம்-  மைசூர் செல்லும் வழியில் உள்ள பண்ணாரி  என்னும் ஊரில் அமைந்துள்ள பண்ணாரி அம்மன் கோவிலாகும். கடந்த மார்ச் 8ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கிய பண்ணாரி அம்மன் காப்புக்கட்டு விழா, நாளை மார்ச் 22 செவ்வாய்க்கிழமை  அன்று திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் ஈரோடு மாவட்டம் முழுவதும் பள்ளி மற்றும் அரசு நிறுவனத்திற்கு உள்ளூர் விடுமுறை என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு. கிருஷ்ணனுண்ணி அறிவித்தார்.

 

ஸ்தல வரலாறு (Bannari Temple History in Tamil)

பண்ணாரி அம்மன் திருக்கோயில் தமிழக அறநிலைத் துறையால் பராமரிக்கப்படும் திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயிலுக்கு மெய்சிலுர்க்க வைக்கும் வரலாறு உள்ளது, இக்கதை செவி வழி கதை மட்டும் தான் முன்னொரு காலத்தில் சலவைத் தொழில் செய்யும் தம்பதியினர் இருவரும் தன் வேலையைப் பார்த்து வந்த வேலையில் நிறைமாத கர்ப்பிணியான அந்த பெண் பிரசவ வலியால் அவதிப்பட அவள் கணவன் துவைக்க வைத்த துணிகளை வைத்து மறைப்பு ஏற்படுத்தித் தானே தன் மனைவிக்கு பிரசவம் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

அவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் பிறந்ததாகவும், ஒரு குழந்தையை அவர்களால் தூக்க முடியாததால் அருகிலிருந்த தாழியில் வைத்து ஊர் பெரியவர்கள் உதவியுடன் தாழியை தூக்க முற்பட்டனர்.  பின் அனைவரும் முயன்றும் தூக்க முடியாததால் கடப்பாரை கொண்டு தாழி நகர்த்த முயற்சி மேற்கொண்ட வேளையில் குழந்தையின் வல மார்பில் கடப்பாரை பட்டு இரத்தம் வந்தது என்றும் பின் அம்மன் உருவம் பெற்று தனக்கு திருவிழா நடத்தக் கோரிய ஆசைக்கு இணங்கி  மக்கள் திருவிழா கொண்டாடப்பாடுகிறர்கள் என்று வரலாறு கூறுகிறது.

இன்றளவும் அம்மனின் மார்பில் கடப்பாரை பட்ட தடம் இருப்பதாகவும் பூஜையின் போது நாம் கவனிக்க முடியும் என்று மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த அம்மன் சலவைத் தொழில் செய்யும் வண்ணார் சமுதாய மக்களின் கடவுளாகக் காணப்படுகிறது.

பண்ணாரி அம்மன் திருவிழா(Bannari Temple  function)

ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பிரசித்தியாகக் கொண்டாடப்படும் பண்ணாரி அம்மன் குண்டம் இறங்கும் விழா நடைபெறும். இந்த வருடத்தின் திருவிழா நாளை மார்ச் 22 குண்டம் இறங்கும் விழாவுடன் நிறைவு பெறுகிறது. மிகவும்  பிரசித்தி பெற்ற இந்த விழாவுக்குப் பக்தர்கள் ஈரோடு,சேலம்,நாமக்கல், கோவை,கரூர், நீலகிரி என பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் அலையென வந்து அம்மன் அருள் பெறுவது வழக்கமாகும். கொரோனா பேரிடர் முடிந்து வரும் இந்த வருடத் திருவிழாவுக்கு மக்கள் பாதுகாப்பு கருதி 1500 போலீஸ் பாதுகாப்பு பயன்படுத்தப்பட்டு உள்ளது.

மக்கள் நெரிசலைத் தடுக்க மார்ச் 21,22 மற்றும் 28 ஆகிய தினங்களுக்கு 100க்கும் அதிகமான சிறப்புப் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது, தீ விபத்தைத் தடுக்க முன் களமாகத் தீயணைப்புத் துறையும் பாதுகாப்பு அளித்துள்ளது.

தமிழகத்தைப் போலக் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் பண்ணாரி அம்மனைத் தரிசிக்க  பக்தர் விமர்சையாக வருவதுண்டு அதனால் கூடுதல் பாதுகாப்பாக போலீஸ்சார் மாறுவேடத்தில் ரோந்து வந்து கொண்டு இருக்கின்றனர். மேலும் மூன்று இடங்களில் கண்காணிப்பாக உயர்ந்த கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.     


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்