சென்னையில் வேலைக்கு தந்தியுடன் சென்ற ஐடி பெண் ஊழியர் லாரி சக்கரத்தில் மாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை கொளத்தூர் மகாலிங்கம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன். இவருக்கு கீர்த்தனா என்ற 24 வயது மகள் இருக்கிறார். அவர் ஓஎம்ஆர் சாலை துரைப்பாக்கத்தில் உள்ள பிரைவேட் சாஃப்ட்வேர் ஒன்றில் பணிபுரிகிறார். இன்று காலை எப்பையும் போல தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார் கீர்த்தனா.
மாம்பாக்கம் - மேடவாக்கம் பிரதான சாலையில் பொன்மார் பகுதியை கடக்கும்போது, இவர்களுக்கு பின்னால் கட்டுமான பணிக்கு தேவையான கம்பிகளை ஏற்றிக்கொண்டு டிரெய்லர் லாரி வந்ததுள்ளது. லாரி ஓட்டுநர் சத்தமாக ஹார்ன் அடிக்க, மணிவண்ணன் பிரேக் பிடிக்க, மண்ணில் சரிந்து அவர்கள் சென்ற இரு சக்கர வாகனம் கீழே விழுந்தது.
அப்போது கீர்த்தனா விழுந்த பிறகு, நிற்காமல் வந்த டிரெய்லர் லாரி அவர் மீது எறியுள்ளது. அதனால் லாரியின் சக்கரத்தில் கீர்த்தனாவின் தலை மாட்டி, நசுங்கி பரிதாபமாக சம்பவ இடத்துலையே உயிரிழந்தார். அவரின் தந்தை மணிவண்ணன் லேசான காயங்களுடன் தப்பித்துள்ளார். தந்தை கண் முன்னே தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…