Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

கோவை கார் வெடிப்பு சம்பவம்.. 18 பேருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பு.. சென்னையில் பரபரப்பு..

Nandhinipriya Ganeshan November 10, 2022 & 11:02 [IST]
கோவை கார் வெடிப்பு சம்பவம்.. 18 பேருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பு.. சென்னையில் பரபரப்பு..Representative Image.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த மாதம் 23 ஆம் தேதி கார் வெடிப்பு நடந்தது. இதில் காரில் இருந்த ஜி.எம். நகரை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 28 வயதான ஜமேஷா முபினின் வீட்டில் இருந்து நாட்டு வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டதோடு,  ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு ஆதரவாக சில குறிப்புகளும் கைப்பற்றபட்டன. இந்த வழக்கில் முகமது அசாருதீன், முகமது தல்கா, அப்சர்கான், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் உள்ளிட்ட 6 பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரணை மேற்கொண்டுவருகிறது.

அதன் ஒருபகுதியாக கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பட்டியலின்படி சென்னையில் 5 இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னையில் 18 பேருக்கு  ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ அதிகாரியகள் சோதனை நடத்தி வரும் நிலையில், சென்னையில் உள்ள ஐந்து இடங்களில் தனியாக போலீசார் சோதனை நடத்திவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்